Monday, September 16, 2019

ராஜ விசுவாச ஆசிரியர் சங்கம்




ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று தமிழக அரசின் ஆணை மிகவும் மோசமான ஒரு விஷயம் என்றால் அதனை ஒரு ஆசிரியர் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தொழிற்சங்கம் ஆதரித்துள்ளது அரசின் நடவடிக்கையை விட மோசமானது.

தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக போதுமான எதிர்வினையாற்ற ஆசிரியர் அமைப்புக்கள் தவறி விட்டன என்று ஒரு குமுறல் உள்ளது. அது நியாயமும் கூட.

அரசனை மிஞ்சிய அரச விசுவாசியாக இருக்கும் இந்த “ஸோ கால்ட் ஆசிரியர் அமைப்பு”  போன்றவைதான் தொழிற்சங்கத் தத்துவத்திற்கே களங்கம்.

மீதியுள்ள அமைப்புக்களாவது இது போன்ற மாணவர் பிரச்சினைகளில் களம் புக வேண்டும். அதை விடுத்து தங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடினால் அவர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டாலோ அல்லது சிறையில் அடைக்கப்பட்டாலோ அவர்களுக்காக குரல் கொடுக்க ஒருவரும் வர மாட்டார்கள்.

பிகு: தமிழை பிழையாக எழுதுகிறார்கள் என்ற அறிக்கையிலேயே எவ்வளவு பிழைகள் !!!!

No comments:

Post a Comment