இந்தியாவை
ஒருங்கிணைக்க இந்தியால் மட்டுமே முடியும், இந்திதான் தேசிய மொழி. அனைவரும் இந்தி பயில
வேண்டும் என்று அமித் ஷா சொல்வது இந்தித் திணிப்பை நியாயப்படுத்தும் அப்பட்டமான ஆணவம்.
தாய்மொழி
தவிர வேறு மொழிகளை ஒருவர் கற்றுக் கொள்வது என்பது அவரவர் விருப்பம் மற்றும் தேவை சார்ந்தது.
அரசு சொல்லாமலேயே தங்களுக்குத் தேவைப்படும் மொழியை அவர்களே கற்றுக் கொள்வார்கள்.
அப்படி
இருக்கையில் இந்தி பிரச்சார சபாக்களும் இந்தி தேர்வில் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்கள்,
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதும் தேவையில்லாத ஆணிகளே. இந்தி தினம் என்று கொண்டாடுவதும் பணத்திற்குப் பிடித்த கேடு.
அப்படி
இந்திக்கு முன்னுரிமை அளிக்க அது ஒன்றும் இலக்கியப் பாரம்பரியம் கொண்ட செம்மொழியும்
இல்லை, அமித் ஷா சொல்வது போல தேசிய மொழியும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தில் தேசிய
மொழி என ஒன்று கிடையவே கிடையாது. அது மட்டுமல்ல, இந்தியாவின் அடையாளம் என்று பெருமைப் பட்டுக் கொள்ள இந்தியில் எதுவுமே கிடையாது.
ஒருவருக்கு
தேவையில்லாத ஒன்றை அவர் மீது அரசு திணிப்பது என்பது ஒரு விதமான சர்வாதிகார நடவடிக்கையே.
அரசு வன்முறையே, இந்தி திணிப்பும் அது போன்ற அரசு வன்முறையே.
அப்படிப்பட்ட
வன்முறையில் அரசு ஈடுபடுகிற காரணத்தால்தான் இந்தித் திணிப்பின் மீது வர வேண்டிய கோபமும்
வெறுப்பும் இந்தி மொழி மீதே வந்து விடுகிறது.
என்
விருப்பத்தின் பேரிலான ஒன்றை வலியத் திணிப்பது என்பது நிச்சயம் ஒருங்கிணைப்பிற்கான
வழி அல்ல. பிரிவினைக்கான தூண்டுதலே.
ஆனால்
இதனையெல்லாம் உணர்ந்து கொள்ளும் மன நிலையில் மூடர்களும் முரடர்களும் நிரம்பிய இன்றைய
மத்திய அரசு இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
#NoHindiImposition
முதலில் இந்தி என்று ஒரு மொழியே கிடையாது .
ReplyDeleteஇந்தியை திணிக்க முயன்றதால் இந்தியா பிரிவினையை
சந்திக்க நேர்ந்தது.
பழைய சரித்திரத்தை கொஞ்சம் ஞாபகம் படுத்திக் கொள்வோம் .
1920 க்கு முன் இந்தி என்ற மொழியே இல்லை .
அப்போது இருந்தது இந்துஸ்தானி .
அதை உருது எழுத்துக்களில் எழுதப்படும் .
இந்தியாவிற்கு ஒரு தேசிய மொழி வேண்டும் என்ற போது
இந்துஸ்தானி கொண்டு வரலாம் என்ற எண்ணம் எழுந்தது.
அப்போது இந்தி என்று தேவநாகரி லிபியில்
எழுதப்பட்ட மொழி அறிமுகம் செய்யப்பட்டது .
உருது முஸ்லிம்கள் மொழி - அதனால் இந்திய
மொழியாக இந்தி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது .
உ பி இன்றும் பழைய கோர்ட் ரெக்கார்ட் உருதுவில்தான் இருக்கும் .
இவர்கள் செய்த அலப்பறையில் பாகிஸ்தான் உண்டானது .
இந்திக்கு இலக்கணம் 1954 ல் தான் வெளிவந்தது .