Thursday, September 19, 2019

சீ!சீ! இழி குணத்தார் . . .




மேலேயுள்ள தகவலோடு உள்ள படத்தை பகிர்ந்து கொள்ளவே மிகவும் தயக்கமாக இருந்தது.

களத்தில் செயல்படும் பெண்களை இது போன்ற அவதூறு போட்டோஷாப் செய்திகள் மூலம் இழிவு படுத்த நினைக்கும் நபர்கள்  சமூகத்தின் நச்சு விதைகள்.

பெண்களை அடுக்களைக்குள் அடைத்து முடக்கி வைக்க முயலும் முரடர்கள் எல்லாம் சங்கிகளாகவே இருப்பது யதேச்சையானது அல்ல. அவர்களின் தத்துவமே அதுதான்.

இந்த இழி குணத்தாரெல்லாம் பெரும்பாலும் ஃபேக் ஐ.டி களில் இருந்துதான் செயல்படுகின்றனர் என்பது இன்னொரு ஒற்றுமை. 

"யோக்கியனுக்கு இருட்டில என்ன வேலை?"

என்பது போல 

நேர்மையானவன் ஏன் ஃபேக் ஐடியில், அனாமதேயமாக ஒளிந்து வரப் போகிறான்! அயோக்கியனுக்குத்தான் தன் முகத்தை மறைத்துக் கொண்டு வேஷம் போட வேண்டிய அவசியம் உள்ளது.

இப்படி அவதூறு செய்தவனை, இந்த இழி குணத்தானைக் கண்டு பிடித்து நடுத்தெருவில் நிற்க வைத்து கல்லால் அடித்தால்தான்  அவனைச் சார்ந்தவர்களும், அவனைப் போன்றவர்களும் திருந்தாவிட்டாலும் அடங்கியாவது போவார்கள். 


1 comment:

  1. அப்போ இது போலியானதா ?
    நேற்று முகநூலுக்கு வந்தது நான் உண்மை என்றே நம்பி விட்டேன்

    அவிநாசி பாலகுமாரன்

    ReplyDelete