பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்கு சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்து அந்தமான் சிலையிலிருந்து விடுதலையான
கோழை சவர்க்கருக்கு “வீர் சவர்க்கர்” என்ற அடைமொழியைக் கொடுத்தது யார்?
யார்
தெரியுமா?
அவரேதான்.
அவரேதான்
தனக்குத்தானே “வீர்” சவர்க்கர் என்று அடைமொழி கொடுத்துக் கொண்டுள்ளார்.
ஆமாம்.
நிஜம்தான்.
சவர்க்கரின்
வாழ்க்கை வரலாறு 1926 ல் “பாரிஸ்டர் சவர்க்கரின் வாழ்க்கை” என்ற தலைப்பில் சித்ரகுப்தா
என்பவர் எழுதி வெளியானது.
சவர்க்கர்
வல்லவரு, தீரரு, சூரரு, வீரரு என்று அவரது பெருமையை எல்லாம் சித்ரகுப்தா அடித்து விட்டுள்ளார்.
அந்த நூல் மூலம்தான் “ஒரு நாயகன் உதயமாகிறான்” என்று வீர் சவர்க்கர் பில்ட் அப் ஆரம்பமாகி
உள்ளது.
“Life of Barrister Savarkar” அறுபத்தி ஓரு வருடங்களுக்குப் பின்பு மறு
பதிப்பு கண்டுள்ளது. அதனை பதிப்பித்த ரவீந்திர ராமதாஸ் என்பவர் அப்பாவித்தனமாக ஒரு
உண்மையை தனது முன்னுரையில் கூறி விட்டார்.
சித்ரகுப்தா
என்பவர் வேறு யாருமில்லை, சவர்க்கர்தான் என்று.
யப்பா
சாமி, இது உலக மகா டுபாக்கூர் வேலைடா டேய் . . .
ஒரு தகவல் கேட்க வேண்டும்
ReplyDeleteதமிழ்மணம் செயலிழந்த பின் உங்கள் தளத்துக்கு வருபவர்களின் எண்னிக்கை குறைந்துள்ளதா ?
எனது தளத்துக்கு வருபவர்களின் எண்னிக்கை 90% குறைந்துள்ளது
வாரத்துக்கு 10 கூட இல்லை
ஆம். ஒரு நாளைக்கு 800, 900 பேர் வருவது 500, 600 என்று குறைந்துள்ளது
Deleteசும்மா கதை விடாதே தம்பி
Deleteஇதில் கதை விட என்ன உள்ளது அனானி? இதோ இன்று இந்த நிமிடம் வரை வருகை தந்தவர்கள் 536 பேர். ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நாளை பகிர்ந்து கொள்கிறேன்.
Delete