Sunday, September 8, 2019

காஷ்மீரை மறப்போமா?



தொடர்பு எல்லைக்கு அப்பால் போன சந்திராயன் 2 வின் விக்ரம் லேண்டர் பற்றிய கவலையில் ஒரு மாதமாக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் பற்றி மறந்தோமே என்ற ஒரு குறுஞ்செய்தி மனதை மிகவும் பாதித்தது.

ஆம்.

அராஜக நடவடிக்கையை மோடி அரசு எடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.

காஷ்மீர் இன்று இந்தியாவின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறை என்பதுதான் யதார்த்தம்.

தாயைப் பார்க்க மகளும்
தன் கட்சித் தோழரைப் பார்க்க தலைவரும்

உச்ச நீதி மன்றத்தில் போராட வேண்டியிருந்தது என்பது ஒரு சான்று.

அக்டோபர் மாதம் முதலீட்டாளர் மாநாடு நடக்கும் என்று ஆரவாரமாக அறிவித்து விட்டு பின்பு அதனை தேதி குறிப்பிடாமல் மோடி அரசே ஒத்தி வைத்தது என்பது 

இன்னொரு சான்று.

காஷ்மீர் மக்களை மறந்தால் நாளை நமக்கும் அதே கதிதான்.
இது வரை எழுப்பப்பட்ட  குரல்கள் போதாது.
இன்னும் இன்னும் உரக்க பேசிட வேண்டும். 

1 comment:

  1. because of recession (bubble) each and every indians are dying slowly. But the media worry about the lander in chandrayaan. We can request modijee and amitjee to go along with sangkey-monkey parivar to moon to recover the lander. If possible bring ambanijee,adhanijee, neeravjee, lalitjee and malliyajee along with them. Bharat matha ki jay.

    ReplyDelete