Tuesday, January 30, 2018

மத நல்லிணக்கமா? நோ. நோ. நோ.




அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று மத நல்லிணக்க பாதுகாப்பு உறுதிமொழியேற்பது என்ற நிகழ்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலத்தில் பல இடங்களில் நடத்தியுள்ளனர், காவல்துறை தடையை மீறி.

ஆம் காவல்துறை தடையை மீறி

மத நல்லிணக்கத்தை பாதுகாப்பது என்பது எடுபிடி அரசுக்கு எட்டிக்காயாய் கசக்கிறதாம். ஆகவே காவல்துறை இந்நிகழ்விற்கு தடை விதிக்கிறது.

காவிக்குண்டர்கள், கையில் தடியோடும் வாளோடும் வாயில் விஷத்தோடும் ஊர் ஊராய் பேரணி நடத்தவும் மத வெறியை தூண்டும் வாசகங்களை முழக்கவும் முழுமையாய் காவல்துறை பாதுகாப்பு தருகிற மாநிலத்தில்

அசிங்கமான சொந்தப் பிரச்சினை காரணமாக காவிகளாலேயே கொல்லப்பட்ட இன்னொரு காலிக் காவியின் பிணத்தை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர்கள் ஊர்வலம் போய் வழியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளைத் தாக்கவும் மொபைல் போன்களையும் அண்டாவோடு பிரியாணியை திருடுவதையும் வேடிக்கை பார்க்கிற காவல்துறைக்கு  “அமைதியை உருவாக்க மத நல்லிணக்கம் காப்போம்”  என்ற முழக்கம் அலர்ஜியாய் இருக்கிறது.

காந்தியடிகளின் நினைவு நாள் என்றால் அவர் கொல்லப்பட்டது மட்டுமல்ல, காவிகளால்தான் கொல்லப்பட்டார் என்பதும் நினைவுக்கு வருவதால் காவிகள்  வீசிய எலும்புத்துண்டுகள்தான் இன்றைய ஆட்சி என்பதால் வாலைக் குழைத்துக் கொண்டு விசுவாசத்தை காண்பித்துள்ளது எடுபிடி அரசு.

எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காந்தியடிகளை கொன்று விட்டீர்களே படுபாவிகளே . . .



No comments:

Post a Comment