சொர்ணாக்கா வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது கொடுத்து தந்தை பெரியாரையும் தமிழ் இலக்கியத்தையும் எடுபிடி அரசு இழிவுபடுத்தியது குறித்து காலையில் எழுதியிருந்தேன்.
கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்தால் "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் மன்ற தலைவி" விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு தந்தை பெரியார் விருது கொடுத்து தந்தை பெரியாரை சிறுமைப் படுத்த தொடங்கியது ஜெயலலிதா தான்.
16 ஜனவரி 2012 அன்று எழுதிய பதிவு கீழே.
தந்தை பெரியாருக்கு இப்படி ஒரு அவமானமா?
தந்தை பெரியாரை வேறு யாரும் , ஏன் ராம கோபாலன்
வகையறாக்கள் கூட இப்படி அவமானப் படுத்திவிட முடியாது!
அப்படி ஒரு களங்கத்தை ஜெயலலிதா செய்துள்ளார்.
தந்தை பெரியார் விருதை விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு
அளித்துள்ளார். வாழ்நாள் முழுதும் மூட நம்பிக்கைக்கு எதிராக,
கடவுள் மறுப்பிலும் பாடுபட்டவர் பெயரிலான விருது
மேல்மருவத்தூர் பக்தர்கள் சங்க தலைவிக்கா?
தன்னையே கடவுளாகக் கூறிக் கொண்டு புதிய
மூட நம்பிக்கைகளை உற்பத்தி செய்யும் கூட்டத்தில்
ஒருவருக்கு பெரியார் விருதா?
ஜெ செய்யும் இந்த இழிவுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete