Friday, January 5, 2018

மைசூர் போண்டாவும் தீர்ப்புக்களும்

ஷட் அப் பண்ணுங்க சார்


சில மாதங்கள் முன்பு சென்னையிலிருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.  பேருந்து ஒரு பாடாவதி உணவகத்தில் நின்றது. அது உணவு நேரம் கூட கிடையாது. ஒரு ஐம்பது நிமிடப் பயணத்தில் வேலூரே வந்து விடும். எதற்கு இங்கே நிறுத்தினீர்கள் என்று நடத்துனரிடம் கேட்க, அவர் ஒரு கடிதத்தை காண்பித்தார்.

ஏதோ ஒரு நாள் அந்த பேருந்து அந்த உணவகத்தில் நிற்காமல் சென்ற காரணத்தால் “உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று நிர்வாகம் அவருக்கு அனுப்பிய மெமோ அது.

சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஒரு பேருந்து விபத்து நிகழ்கிறது. ஓட்டுனர் தொலைபேசியில் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால்தான் விபத்து நிகழ்ந்தது என்று எல்லோரும் அவரை குற்றம் சுமத்தினார்கள். ஆனால் உண்மை என்ன?

அவரது இருக்கை நாசமாகி விட்டது. பழுது பார்க்க நிர்வாகம் தயாராக இல்லை. கட்டை ஒன்றை முட்டுக் கொடுத்து கயிற்றால் கட்டி வைத்து பேருந்தை ஓட்டுகிறார். முட்டுக் கொடுத்த கட்டை உடைந்து போகிறது. பேலன்ஸ் தவற, இருக்கையில் அவர் தடுமாற விபத்து நேர்கிறது.

போக்குவரத்து ஊழியர்களின் பணிச்சூழல் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை இந்த இரண்டு உதாரணங்கள் உணர்த்தும்.

பழுது பார்க்கப்படாத, உதிரி பாகங்கள் மாற்றப்படாத காயலான் கடைக்குப் போக வேண்டிய பேருந்துகளைத்தான் குண்டும் குழியுமான சாலைகளில் ஓட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.  வெள்ளம் மழை போன்ற காலக்கட்டங்களில் சென்னையில் தனியார் டாக்ஸி நிறுவனங்கள் காணாமல் போன நேரத்தில் கூட  அரசுப் போக்குவரத்து ஊழியர்கள்தான் அயறாது பணி செய்தார்கள்.

பணி நேரம் என்பதெல்லாம் பார்க்காமல் கூடுதல் நேரத்திற்கு பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். விடுமுறை கிடைப்பதோ குதிரைக் கொம்பு.  சரி ஓய்வு பெற்ற பின்பாவது ஓய்வுக்காலப் பலனையும் பென்ஷனையும் அனுபவித்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடிகிறதா என்று பார்த்தால் அதற்கும் வாய்ப்பு கிடையாது.

ஓய்வு பெறும் நாளன்றே சட்டபூர்வமாக அளிக்கப்பட வேண்டிய  தொகையைப் பெறவே நீதிமன்ற படிக்கெட்டுகளில் ஏற வேண்டி உள்ளது.

கடந்த முறை வேலை நிறுத்தத்தின் போது ஒப்புக்கொண்ட  உயர்வை அளிக்காமல் அரசு ஏமாற்றுகையில் வேலை நிறுத்தம் தவிர வேறு என்ன வழி மிஞ்சியுள்ளது போக்குவரத்து ஊழியர்களுக்கு?

இன்றைய நிலைமைக்கு எடுபிடி எடப்பாடி  அரசே  காரணம்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்போம். அவர்களது கோரிக்கைகள் வெல்லட்டும் என்று வாழ்த்துவோம்.

உங்களால் அவர்களுக்கு ஆதரவளிக்க முடியவில்லையென்றாலும் பரவாயில்லை. தயவு செய்து வாயையாவது மூடிக் கொண்டிருங்கள்.


Opponents of Transport Strike – Will you please Shut up? 

பின் குறிப்பு : காலையில் எழுதினாலும் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. 

அதன் பின்பே கட்டளை வந்துள்ளது.

மைசூர் போண்டாவில் மைசூர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போல தீர்ப்பில் நீதி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய பாடம் வழங்கியுள்ளார்கள். 

3 comments:

  1. மைசூர் போண்டாவில் மைசூர் இல்லை, நீதி மன்றத் தீர்ப்பில் நீதி இல்லை
    சிறந்த உவமை

    ReplyDelete
  2. Our policy makers are really foolish suckers (I mean blood suckers of poors) and boot lickers of rich. For example with the salary of one high court judge (Rs.200000 per month) we may recruited 10 magistrates (Rs.20000/- per month). Will they agree to do so. For themselves it is blood but others fruit jam. General public has to agitate to reduce the up-normal salary of Group A officers.

    ReplyDelete