கொடி பறக்கட்டும்,
பட்டொளி வீசி
நன்றாக பறக்கட்டும்.
அனைவரும் சமமென்று
அரசியல் சாசனம்
அழுத்தமாய் சொல்வதை
ஆள்வோருக்கு நினைவுபடுத்த
கொடி பறக்கட்டும்.
பல வண்ண மலர்ச்செடிகள்
பரவியுள்ள தோட்டமிது,
ஒவ்வொன்றும் ஒரு மணம்
எல்லாமே நறுமணம்
என்பதை எல்லோருக்கும்
உணர்த்தி
கொடி பறக்கட்டும்.
வாக்கின் மதிப்பு
அனைவருக்கும் ஒன்றாய்
இருப்பது போல
வாழ்வின் மதிப்பும்
அமைவதுதான்
உண்மையான குடியரசு
என்று புரிந்து கொள்ள
கொடி பறக்கட்டும்.
அன்னியரை துரத்தியடித்து
நம்மை நாமே ஆளத்துவங்கிய
நாளென்று நினைவுபடுத்தி
கொடி பறக்கட்டும்.
வேற்றுமைத் தீயை
மூட்டிடும் மூரடரைப்
புறக்கணித்து
அன்னியர் காலடியில்
வீழாதிருப்பவர்,
அனைவரும் சமமென்பதை
அன்றாடம் உரைப்பவர்,
பலவண்ண மலர்த்தோட்டத்தை
பாதுகாக்கும் உத்தமர்,
அவர்தம் ஆளுகையில்தான்
அரசியல் சாசனம் பிழைக்குமென்று
உரக்கச் சொல்லி,
கொடி பறக்கட்டும்.
செங்கொடியின் புதல்வர்கள்
கையில்தான்
மூவர்ணக் கொடியும்
பத்திரமாய் பறக்கும்!
கொடி பறக்கட்டும்.
பட்டொளி வீசி
பத்திரமாய் பறக்கட்டும்!
பத்திரமாய் பறக்கட்டும்.
ReplyDeletejai hindustan, vandhe maatharam
ReplyDeleteஹிந்துஸ்தான் இல்லை. இந்தியா.
Deleteஇன்று வந்தேமாதரம் முழக்கத்தை முன்வைப்பவர்கள்,
சுதந்திரப் போராட்டத்தின் போது ஒளிந்து கொண்ட, காட்டிக் கொடுத்த கோழைகள்