முஸாபர்நகர்
கலவரத்தை மறந்து விட முடியுமா? போலீஸ் ஸ்டேஷன் அளவில் முடிக்க வேண்டிய ஒரு சாதாரண அடிதடி
பிரச்சினையை மாவட்ட அளவிலான கலவரமாக மாற்றிய பெருமை பாஜகவிற்கு உண்டு. அகில இந்திய
தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்பு உத்தரபிரதேச மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும்
என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அஸைண்மெண்ட்.
அதற்காக
நடத்தப்பட்டதே முஸாபர்நகர் கலவரங்கள். இதிலே பாதிக்கப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே
என்பது நினைவுக்கு வருகிறதா?
மஹா
பஞ்சாயத்,
போலி
வீடியோ வினியோகம்,
அறுபது
பேர் மரணம்,
பல
கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் நாசம்,
ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகள் முகாமில் குடியேற்றம்,
கலவரத்தை
தூண்டியவர்களுக்கு மலர் கிரீடம் அணிவித்து மோடி மரியாதை
போன்றவையெல்லாம்
நினைவுக்கு வருகிறதா?
இவை
நினைவுக்கு வராவிட்டாலும்
கலவரங்கள்
நிகழ்ந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும் என்று அமித் ஷா ஆணவத்தோடு சொன்னதாவது நினைவிற்கு
வரும் என்று நம்புகிறேன்.
வன்முறைக்கலவரத்தை
தூண்டியதாக பாஜக எம்.பி, எம்.எல்.ஏ, வட்ட, சதுர, செவ்வக பொறுப்பாளர்கள் மீதெல்லாம்
அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற வேண்டும் என்று மாநில உள்துறை
செயலாளர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆமாம்,
நியாயம்தானே?
மோடி
பிரதமராவது அதிக எம்.பிக்களை கொடுத்த மாநிலம் உத்தரப் பிரதேசம். அதற்கு உதவியது முஸாபர்நகர்
கலவரம்.
மோடியை
பிரதமராக்கிய கலவரத் தளகர்த்தர்களுக்கு பதவியும் பொன்னும் மணியும் அள்ளி அள்ளி கொடுத்து
அழகு பார்ப்பதுதானே முறை? அதுவும் கலவர மன்னன் யோகிசீசீ முதல்வராக இருக்கையில்
????
பேயரசு
ஆட்சி செய்கையில் பிணம் தின்னுபவர்களுக்குத்தானே முதல் மரியாதை!
அவர்கள்
மீது வழக்கு இருப்பதா?
ப்ளடி
ஃபூல்ஸ், முதலில் அதை திரும்பப் பெறு.
அப்போதுதானே
அவர்கள் தொடர்ந்து கலவரம் செய்ய முடியும் . . .
No comments:
Post a Comment