இளையராஜா பற்றிய செய்திக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை மன்னிப்பு கேட்டு விட்டது. இப்போது மன்னிப்பு கேட்டாலும் மத்தியரசின் உள் நோக்கம் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பித்ததது நல்ல விஷயம்தான். காவிகள் அம்பலமாகிய தருணம் அது.
தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்ததற்கு அவர் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறார்?
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மரபு கிடையாது என்றும்
அப்போது அவர் தியானத்தில் இருந்தார் என்றும் கதை விட்டதற்கு சங்கர மடமும் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறது?
நானும் ரௌடிதான் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஃபிலிம் காண்பித்து திசை திருப்பினாலும் விடுவதாயில்லை.
விஜயேந்திர சரஸ்வதிக்கோ சங்கர மடத்திற்கோ தமிழ்த்தாய் வாழ்த்தோ, தமிழோ பிடிக்கவில்லை என்றால் காஞ்சிபுரம் சங்கர மடத்தை மூடி விட்டு வேறு மாநிலத்திற்கு ஓடட்டும்.
அது வேறொன்றுமில்லை. சின்ன பெரியவா மடத்தில் இரவெல்லாம் ஸ்வர்ண பஜனை செய்ததால் களைப்பில் தமிழ் வாழ்த்து பாடும் போது தூங்கி விட்டாராம்.
ReplyDeleteதமிழ்தாய் வாழ்த்து பாடிய போது தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என்பதுபோல இதற்கும் எழுந்து நிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாததால் அமர்ந்தவாறே அதை கேட்டு மகிழ்ந்தேன் என்ற ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவர் மக்கள் மனதில் உயர்ந்து இருப்பார் இப்படி அவர் சொல்லி இருந்தால் மன்னிப்பு கூட கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.. அப்படி பேச அவரின் "அகந்தை" இடம் கொடுக்கவில்லை என்பதே உண்மை அதனால் அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்கமாட்டார்
ReplyDeleteயாரும் இருக்கலாம் இங்க,எல்லோரையும் ஒன்றாய் மதித்தால்...
ReplyDelete