Wednesday, January 24, 2018

இப்படியே இருந்தா நல்லாதான் இருக்கும்



நேற்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இரண்டு தீர்ப்புக்கள் முக்கியமானது.

ஹாதியா வழக்கில்

 “அவர் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அரசாங்கமோ, நீதிமன்றமோ, புலனாய்வுத் துறையோ தலையிட முடியாது. அவரது திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஆய்வு செய்யப்பட வேண்டும்”

என்றும்

பத்மாவத் வழக்கில்

“படத்தை திரையிடுவதற்கான தடைகளை நீக்கும் எங்கள் உத்தரவுகளை மாற்ற முடியாது. மீண்டும் எங்களிடம் வராதீர்கள். கலவரத்தை தூண்டும் சிறு கும்பல்களுக்கெல்லாம் இடம் கொடுத்தால் இதுவே வழக்கமாகி விடும்”

என்றும்

கறார்தன்மை காட்டியுள்ளது.

அது மட்டுமல்ல, பேரறிவாளன் விடுதலைக்கான வழக்கிலும் சி.பி.ஐ மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கண்டிப்போடு கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இப்படியே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நேற்று போல இன்றும், என்றும் இருக்குமா?


No comments:

Post a Comment