Sunday, January 7, 2018

நாங்கள் டாய்லெட் கட்டுகிறோம். நீங்கள் . . .

இன்று காலை 'தி ஹிந்து' நாளிதழில் பார்த்த செய்தி.

தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களுக்கு அருகில் டாய்லெட் கட்டிக் கொடுத்து பிரதமரின் "தூய்மை இந்தியா" திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று நிதியமைச்சகம் அந்நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் இல்லையில்லை கட்டளை பிறப்பித்துள்ளது.

இந்தியா தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கு அரசு நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தேச உடமையாக்கப்பட்ட வங்கிகளிடமும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமும் அரசு  இவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறதே, அதற்கு காரணம் என்ன? அவை அரசு நிறுவனங்கள் என்பதால்தானே?

ஆனால் அரசு நிறுவனங்கள் என்ற அடித்தளத்தை அழிக்க முயல்வதும் இதே அரசுதானே?

அரசு நிறுவனங்களுக்கு பிறப்பிக்கிற இந்த கட்டளையை இந்த அரசால் தனியார் நிறுவனங்களுக்கு பிறப்பிக்க முடியாது. அவர்களின் நல்வாழ்விற்காக மட்டுமே சேவகனாய், எடுபிடியாய் செயல்பட்டாலும் கூட . . .

தாங்கள் விரும்புவதையெல்லாம் செய்கிற அரசு நிறுவனங்களுக்கு இந்த அரசு உதவ வேண்டாம். குறைந்தபட்சம் அவற்றை அழிக்காமல் இருக்கலாமே? அவர்களது பங்குகளை தனியாருக்கு விற்காமல இருக்கலாமே? தனியார் வளர்வதற்காக பொதுத்துறை நிறுவனங்களை முடக்காமல் இருக்கலாமே?

உங்கள் அரசியலுக்காக எங்களை டாய்லெட் கட்டச் சொல்லி விட்டு உங்கள் எஜமானர்களுக்காக எங்களுக்கு பாடை கட்டுகிறீர்களே, நியாயமா அரசே? நியாயமே மோடியே?





3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ இன்னும் செத்துப் போகலையா?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete