எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் உள்ளவர்கள்தான் வைரமுத்துவும் எச்.ராசாவும்.
எப்படியாவது ஞானபீடம் வாங்குவது என்பது வைரமுத்துவின் நினைப்பு. அதற்காக எந்த சமரசத்திற்கும் எந்த அளவிற்கும் கீழிறங்கவும் அவர் தயார்.
எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எச்.ராசாவின் நினைப்பு. அதற்காக எந்த அளவிற்கும் கீழிறங்கி தரக்குறைவாக பேசி வன்முறையை உருவாக்க முயல்வது அந்த கேவலமான மனிதனின் வாடிக்கை.
வைரமுத்துவை ஆபாசமாக பேசிய எச்.ராசாவிற்கு என் கண்டனங்கள். நாக்கை அடக்கு நாகரீகமற்ற பேர்வழியே என்று உரக்க முழங்குகிறேன்.
எச்.ராசா பேசியதை படிக்கையில் நமக்கு வருகிற கோபத்தில் சிறிய அளவு கூட "எரிமலை எப்படி பொறுக்கும்? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?" என்று பாடிய கவிக்கு வராதது குறித்து வியப்பில்லை.
வியர்வையின் மகிமை குறித்து விவரித்து எழுதிய அவர் "தன் கையில் ஒரு தொலைக்காட்சி தொழில்நுட்ப உதவியாளரின் ஒரு துளி வியர்வை சிந்தியதற்காக அறைந்து அவமானப்படுத்தியது பற்றி" அறிந்த போதே அவர் மீதான மதிப்பு சரியத் தொடங்கியது.
தருண் விஜயோடு கைகோர்த்துக் கொண்டது,
"வளர்ந்து நிற்கும் நெற்பயிர் போல பணிவு" என்று மோடியையும்
"நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல" என்று சூரியனுக்கு பல் கிடையாது என்று கண்டறிந்த விஞ்ஞானி நிர்மலா சீத்தாராமன் அம்மையாரையும்
வர்ணித்தது
ஆகியவையெல்லாம் அவர் மீது மரியாதையே இல்லாமல் செய்து விட்டது.
தன்னை இழிவுபடுத்தியது பற்றி கொஞ்சமும் உணர்வில்லாமல் வருத்தம் தெரிவித்தது என்பது
ஞானபீட பேரத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்ற கவலையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
ஏராளமான உபதேசங்களை எல்லோருக்கும் பல காலமாக அருளி வருகிற வைரமுத்து அவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்று உண்டு.
போக்குவரத்துத் தொழிலாளிகளைப் பாருங்கள். பணியை விட்டு தூக்கி விடுவோம் என்று நீதிமன்றம் மிரட்டுகிறது. கொலைபாதகச் செயல் செய்வது போல முதலாளித்துவ ஊடகங்கள் வசை பாடுகிறது. அதற்கெல்லாம் அஞ்சாமல் எங்கள் உரிமையை விட்டுத்தர முடியாது என்று உறுதியாக போராடுகிற அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் தன்மானத்தைக் காத்துக் கொள்ளுங்கள்.
நீதிமன்றத்திற்கு அஞ்சாத அவர்கள் எங்கே?
எச்.ராசா போன்ற கீழ்த்தர மனிதனுக்கு அடிபணிகிற நீங்கள் எங்கே?
திரையுலகில் உங்கள் முன்னோடி, உண்மையான கவியரசு, கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு மீசை எதற்கு?
கர்வத்தின் உச்சம் வைரமுத்தன். ராஜாக்கு மண்டி இடுவது பிச்சைக்காக. இனிமே பிச்சைமுத்தன். நொண்டி கூட அடிக்கத்தயார் அந்த கல்.
ReplyDeleteமிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் ஞானபீடத்திற்காக எதையும் செய்வார் இன்னும் கிழ் இறங்கி வருவார் இந்த வைரமுத்து
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅருமையான கட்டுரை ....இதுதான் என் கருத்தும் மனந்திறந்து... உங்களை பாராட்டுகிறேன் ராமன்ஜி ..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமை!
ReplyDeleteவைரமுத்துவின் மத கருத்து சுதந்திரம் ஆதரிக்கபட வேண்டியது.
ReplyDeleteஇந்த நேரத்தில் அவரை இவ்வளவிற்கு தாக்குவதை நீங்க தவிர்த்திருக்கலாம்.
//திரையுலகில் உங்கள் முன்னோடி, உண்மையான கவியரசு, கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?//
உண்மையான கவியரசு கண்ணதாசன் மட்டும் என்ன உயர்ந்தவரோ?ஒழுக்கம் கடைபிடித்த தமிழனோ?
எம்ஜிஆர் என்பவரை புகழ்ந்து நன்மைகள் பெற்று கொள்வதிற்காக பாட்டு எழுதியவர் தானே.
வைரமுத்து கடந்த திமுக ஆட்சியில் ஒரு பவர் புரோக்கர்..பெரும் முதலாளிகளுக்கு அவர்களுக்கு வேண்டியதை
ReplyDeleteஅரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வாங்கி கொடுக்கும்
தரகு வியாபாரம் செய்பவர். அவ்வப்போது நூல்களை எழுதி "இதிகாசம்" என்று இவரே
பெயர் வைத்துக்கொள்வார். விருதுக்காக லாபி செய்பவர். ஆண்டாள் இழிவு அவருக்கு
கொடுக்கப்பட்ட ஒரு assignment ஆனால் எதிர்வினை இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
வைணவர்கள் தாயாக பாவிக்கும் ஒருவரை பற்றி புரளி சொல்வது தவறே. மன்னிப்பு
கேட்டாலும் குற்றம் குற்றமே.