Monday, January 1, 2018

இன்குலாபோடு புத்தாண்டு . . .



ஒவ்வொரு ஆண்டும் எங்கள் சங்கத்தின் சார்பில் தோழர்களுக்கு அளிக்கும் காலெண்டரின் முதல் பக்கத்தில் ஏதேனும் ஒரு முக்கியச் செய்தியோ அல்லது கவிதையோ இடம் பெறும்.

இந்த ஆண்டு மற்ற பொறுப்பாளர்களோடு கலந்து ஒரு பாரதிதாசன் கவிதையை பிரசுரிக்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் "காக்கைச் சிறகினிலே" இதழ் கைக்கு வந்தது. தோழர் இன்குலாப்  அவர்களின் முதலாண்டு நினைவஞ்சலி சிறப்பிதழ் அது.

அந்த இதழில் படித்த  தோழர் இன்குலாப்  அவர்களின் ஒரு கவிதை மிகவும் பொருத்தமாக இருந்தது. அனைத்து பொறுப்பாளர்களும் ஏற்றுக் கொண்டார்கள். 

காலண்டரின் ப்ரூப்பை இறுதிப்படுத்திய நேரத்தில்தான் தோழருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த செய்தியும் வந்தது. 

அக்கவிதையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



இதெல்லாம் கவிதையில்லை, இதிலே அழகியல் இல்லை, அறம் இல்லை, உப்பு இல்லை, கரி இல்லை என்று பேஸ்ட் விளம்பரம் செய்பவர்களுக்குத்தான் மூளையில்லை என்று சொல்ல வேண்டியுள்ளது. 

No comments:

Post a Comment