போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்டது அவர்களது உழைப்புக்கேற்ற நியாயமான ஊதியம்.
நிதி நெருக்கடி என்று அரசு கதை விட்டாலும் அதற்குக் காரணம் அரசே. அவர்களின் நிர்வாகக் குளறுபடி, முறைகேடுகள்.
ஊதிய உயர்வை அளிப்பதற்குப் பதிலாக
எடுபிடி அரசு கொடுத்திருப்பது
பயணிகளுக்கு பேருந்து கட்டண உயர்வு.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி பொது மக்களை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு எதிராக திருப்புகிற கேவலமான உத்தியன்றி வேறெதும் இல்லை.
இவர்கள் அவசியமே இல்லாமல் கட்டணத்தை உயர்த்த கொள்ளை லாபம் அடிக்கப் போவது என்னமோ தனியார் பேருந்து முதலாளிகள்தான்.
இந்த கேடு கெட்ட அரசை அவர்கள் எப்படி கவனித்தார்களோ?
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் நிச்சயம் போராடும்.
மக்களே, ஆதரவு தருவீர்களா?
இல்லை யார் வீட்டு எழவோ என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் விடுவீர்களா?
டியர் லிடர், இன்றைய நிலையில் நீங்களோ, நானோ bus service நடத்தினாலும் கட்டுப்படியாகாது. நமது vehicle insurance compaines ஒவ்வொரு ஆண்டும் 30% increase பண்ணிகொண்டுவ்ந்தது,. இருந்தாலும் நான் government insurance companyகளில் எனது vehicleலை insurance செய்கிறேன். எனது phone BSNL. எனவே ஒவ்வொரு இர்வும் டிசல் விலைகேற்ப பஸ் கட்டண்த்தை உயர்ததவேண்டும். இல்லாவிடில் டிசல் கட்டண் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
ReplyDelete