ஊடக உலகின் ரௌடியாக சலம்பிக் கொண்டிருக்கிற அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி யின் செய்தியாளரை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனுமதிக்க முடியாது என்று குஜராத் மாநிலத்தின் இளந்தலைவர் தோழர் ஜிக்னேஷ் மேவானி முடிவெடுத்தது சரியான செயலே.
ஆளும்கட்சியின் ஊதுகுழலாக பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிற தினேசன் அர்ணாப், தன் ஹைடெசிபல் சத்தத்தால் எத்தனையோ பேரை இழிவு படுத்தியுள்ளார். மோடிக்காக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோசமான பேர்வழி, உண்மைகளை மூடி மறைக்க கொஞ்சமும் தயங்காத, காவிக்கூட்ட எடுபிடி அர்ணாப் கோஸ்வாமியின் ரிபப்ளிகன் டிவி ஊடக உலகின் கேவலமான கறை.
ஜிக்னேஷ் மேவானி மட்டுமல்ல, அனைவருமே இவர்களை புறக்கணித்தால் கூட தவறில்லை.
கருத்து சுதந்திரம் என்றெல்லாம் சிலர் பேசுகிறார்கள். அர்ணாப் நடத்தும் நிகழ்ச்சிகளில் முதலில் கருத்து சுதந்திரம் உள்ளதா? பாலக்காடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.பி,ராஜேஷ் சில மாதங்களுக்கு முன்பாக அர்ணாப் கோஸ்வாமிக்கு எழுதிய கடிதத்தின் இணைப்பு இங்கே உள்ளது.
உன்னை விட பெரிய தலைவர்களையெல்லாம் டீல் செய்துள்ளேன் என்று தோழர் ராஜேஷிடம் திமிராக பேசிய அர்ணாபின் நிறுவனத்தை இப்படித்தான் டீல் செய்ய வேண்டும்.
பொய்களையே பிழைப்பாகக் கொண்டவர்களுக்கு புறக்கணிப்பின் வலி புரியட்டும்.
ரிபப்ளிக் டி.வி ஐ ஜிக்னேஷ் மேவானி நிராகரித்தார்
ReplyDeleteபதிலுக்கு
அத்தனை ஊடகங்களும் ஜிக்னேஷ் மேவானி ஐ நிராகரித்து குனிய வைச்சு குத்தி கருத்து சுதந்திரத்தை தமிழக ஊடகவியலாளர்கள் நிலைநாட்டி இருக்கின்றார்கள்
வாழ்த்துக்கள்
ஊடகங்களின் பாசிச போக்கு ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது.
Deleteஇந்த ஊடகங்களை மக்களே குனிய வச்சு குத்தி கருத்து சுதந்திரத்தை காப்பார்கள்
இந்திய ஊடகங்கள் பற்றி இந்தியர்கள் முடிவு எடுப்பார்கள்
Deleteஈழ தமிழர்கள் உங்கள் நாட்டு விடயங்களை மட்டும் பார்த்து கொள்ளவும்
மிஸ்டர் சாணக்யன், எந்த விஷயத்தில் யார் கருத்து சொல்வது என்ற உபதேசத்தை எல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் ஊடக அறம் குறித்து உலகம் எங்கும் சிரிக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். எச்.ராசாவிடம் மண்டியிட்ட் வீரர்கள் யார் சார்?
Deleteஅருமை
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete