காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நகராத "தானியங்கி நகரும் படிக்கட்டுக்கள்" பற்றி சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.
அதனை முதன்முதலாக பயன்படுத்தும் வாய்ப்பு நேற்று முன் தினம் கிடைத்து விட்டது.
அதனை இயக்க ஒரு ஊழியரை நியமித்துள்ளனர். பயணிகள் படிக்கட்டுக்களில் ஏற வரும் போது இயக்குகிறார். அவர்கள் உச்சிக்கு போனதும் நிறுத்தி விடுகிறார். மீண்டும் அடுத்த பயணி வந்ததும் அதே கதை. இயங்கிக் கொண்டிருக்கும் போது வரும் பயணிகளுக்கு மட்டும் நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் சலுகை கிடையாது.
பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்றும் அந்த ஊழியரின் பணி நேரம் காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணி வரைக்கும். ஆகவே இதர நேரங்களில் படிக்கட்டு நகராது.
ஒரு தானியங்கி இயந்திரத்தை மனிதரால் இயக்கப்படும் இயந்திரத்தை மாற்றிய பெருமை நம் இந்திய ரயில்வேவுக்கே உண்டு.
நோக்கம் நன்றாகத்தான் உள்ளது. ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மூன்று ஷிப்டாக மாற்றினால் அனைத்துப் பயணிகளும் பயனடைவர். இன்னும் இருவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனை ரயில்வே பரிசீலிக்க வேண்டும்.
தானியங்கியை, மனிதன் இயக்கும் நிலை இங்குதான் நடக்கும்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteThey can use motion sensor-using a human such purposes is a waste.
ReplyDelete