Monday, January 8, 2018

எது நல்ல வாய் என்று சொல்வீரா?



பால்கோ நிறுவனத்தை ஸ்டாரடிஜிக் ஸேல் (Strategic Sale)  என்ற பெயரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு அடி மாட்டு விலைக்கு விற்க முயன்றது மத்தியரசு.

இது தனியார்மயப் பிரச்சினை மட்டுமல்ல, அக்கம்பெனியின் சொத்து மதிப்பில் வெறும் பத்து சதவிகிதம் கூட பால்கோவை வாங்கிய ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பெறாததால் இதிலே ஊழலும் அடங்கியுள்ளது என்று தொழிற்சங்கங்கள் வழக்கு தொடுக்கின்றன.

பாதுகாப்புத் தளவாட விற்பனையை தனியாருக்கு அளிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று ஒரு வழக்கு தொடுக்கப்படுகிறது.

உயிர் காக்கும் பல தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசு நிறுவனங்களை மூடி அந்த உற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவும் நீதிமன்றத்துக்குச் செல்கிறது.

இப்படி பல வழக்குகள்.

இந்த அனைத்து வழக்குகளிலும் மரியாதைக்குரிய மாண்புமிகு நீதியரசர்கள் ஒரே ஒரு நிலைப்பாடுதான் எடுத்துள்ளார்கள்.

பொதுத்துறையா, தனியார் துறையா என்பதெல்லாம் ஒரு அரசாங்கத்தின் கொள்கை முடிவு. அதிலே எல்லாம் நீதிமன்றம் தலையிடுவதோ அல்லது ஆலோசனை சொல்வதோ இயலாது. இவையெல்லாம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்படாது.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றால், ஆலோசனை சொல்லாது என்றால்

“போக்குவரத்து துறையை அரசால் நடத்த முடியாது என்றால் அதை தனியார்மயமாக்க வேண்டியதுதானே?”

என்று இன்று கேட்டுள்ளீர்களே, அது உங்களின் வரம்புக்கு உட்பட்டதுதானா? தனியாரா? பொதுத்துறையா என்பது அரசின் கொள்கை முடிவு கிடையாதா? அதிலே ஆலோசனை சொல்வது உங்களது மரபுதானா?

எது சார் நல்ல வாய்?

எல்லாமே அடிப்படையில் ஒரே வாய்தான்.

முதலாளித்துவத்தை ஆதரிக்கிற வாய். 


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete