Tuesday, January 2, 2018

போன வருஷத்து புத்தகக் கணக்கு . . .

எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்டத் தோழருமான தோழர் ச.சுப்பாராவ் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு பின்பற்றும் பழக்கம் இது. 

கடந்த 2017 ம் ஆண்டு படித்த நூல்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். கடந்த ஆண்டு பயணம் செய்த தூரம் என்பது கிட்டத்தட்ட 36,000 கிலோ மீட்டர். அதனால்தான் இத்தனை நூல்களை படிக்கவும் முடிந்தது. பயணம் இல்லையென்றால் எனக்கு வாசிப்பு இல்லை. ஆனாலும் 2016 ம் வருடத்தை விட ஒரு ஆயிரம் பக்கம் குறைவுதான். 

கடந்த வருடம் புத்தக விழாவில் வாங்கியவற்றில் இரண்டு புத்தங்கள்தான் படிக்க வேண்டியுள்ளது. ஒன்று ராஜீவ் கொலை வழக்கு பற்றி நளினி சொல்ல ஏகலைவன் எழுதியது. அணிந்துரைகளே கலங்க வைக்கிறது. இன்னொன்று எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம். பாதியிலேயே நிற்கிற இன்னொரு நூல் இது.

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே!

புத்தக விழாவில் வாங்கியவற்றில்தான் பெரும்பாலான நூல்களை படித்து விட்டேனே தவிர மிக முக்கியமான தொகுப்பு ஒன்று துவங்க வேண்டியுள்ளது.

ஆம்.

பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள

"மார்க்ஸ் - ஏங்கெல்ஸ்' தொகுப்பு நூல்கள் 12.



இந்த வருடம் முன்னுரிமை அவற்றுக்குத்தான். 

அதனால் இந்த வருடம் புத்தக விழாவில் வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


இப்போது 2017 பட்டியல் இங்கே.

இதிலே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களின் பட்டியலை மாலை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


Sl No Name Author Type Pages Cost
1 குறுக்குத்துறை ரகசியங்கள் நெல்லை கண்ணன் அனுபவம் 112 99
2 கானகன் லக்ஷ்மி சரவணகுமார் நாவல் புனைவு 264 99
3 மீசை என்பது வெறும் மயிர் ஆதவன் தீட்சண்யா நாவல் புனைவு 176 130
4 ஒரு சிக்கல் இல்லாத காதல் கதை சுஜாதா குறுநாவல் 48 25
5 விளிம்பு சுஜாதா குறுநாவல் 55 25
6 கை சுஜாதா குறுநாவல் 79 40
7 சுவருக்குள் சித்திரங்க்ள் தியாகு சிறை அனுபவம் 525 330
8 செல்லுலாய்டின் மாபூமி களப்பிரன் கட்டுரைகள் சினிமா 175 150
9 பிறிதொரு பொழுதில் எஸ்.ஜி.ரமேஷ்பாபு போராட்ட அனுபவம் 128 100
10 உத்தம வில்லன் யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் சினிமா 119 135
11 வேல ராமமூர்த்தி கதைகள் வேல ராமமூர்த்தி சிறுகதைகள் 378 250
12 புதிய கல்விக்கொள்கை - 
அபத்தங்களும் ஆபத்துக்களும் அ.மார்க்ஸ் கல்விக் கொள்கை 80 50
13 லாக்கப் மு.சந்திரகுமார் அனுபவம் 144 120
14 தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ஜெயந்தன் சிறுகதைகள் 222 200
15 தாழிடப்பட்ட கதவுகள் அ.கரீம் சிறுகதைகள் 160 149
16 சுமையா கனவுப் பிரியன் சிறுகதைகள் 214 160
17 நீர் வினாயக முருகன் நாவல் புனைவு 152 150
18 வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார் வாழ்க்கை அனுபவம் 239 165
19 எங்கதை இமையம் நாவல் புனைவு 110 125
20 வால்காவிலிருந்து கங்கை வரை ராகுல் சாங்கிருத்தியான் மனித குல வரலாறு 384 280
21 ஆர்டர், ஆர்டர் கே.சந்துரு நீதித்துறை பற்றி 256 200
22 சைக்கிள் கமலத்தின் தங்கை எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள் 136 140
23 காஃபிர்களின்  கதை கீரணூர் ஜாகிர்ராஜா சிறுகதைகள் 208 160
24 பார்த்தினியம் தமிழ்நதி நாவல் ஈழம் 512 450
25 இடையில்தான் எத்தனை ச.சுப்பாராவ் கட்டுரைகள் 94 70
ஞாயிற்றுக்கிழமைகள்?
26 கருக்கு பாமா நாவல் புனைவு 96 70
27 முகிலினி இரா.முருகவேள் நாவல் சூழலியல் 485 375
28 நான் பூலான்தேவி மரியே தெரஸ்கூன் வாழ்க்கை வரலாறு 363 300
தமிழில் மு.ந.புகழேந்தி
29 கூழாங்கற்கள் கனவுப் பிரியன் சிறுகதைகள் 254 200
30 யானைச்சொப்பனம் இரா.நாறும்புநாதன் கட்டுரைகள் 175 120
31 சமவெளி வண்ணதாசன் சிறுகதைகள் 128 80
32 கடவுள் தொடங்கிய இடம் அ.முத்துலிங்கம் நாவல் புனைவு 269 155
33 சுமார் எழுத்தாளரும்  அஜயன் பாலா கட்டுரைகள் 144 120
சூப்பர் ஸ்டாரும்
34 அணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார் அனுபவம் 144 115
35 முயல் தோப்பு பாஸ்கர் சக்தி சிறுகதைகள் 124 110
36 என் உள்ளம் அழகான கலாப்ரியா கட்டுரைகள் 136 120
வெள்ளித்திரை
37 ஐந்து முதலைகளின் கதை சரவணன் சந்திரன் நாவல் புனைவு 168 150
38 ராஜீவ் காந்தியின் கடைசி தா.பாண்டியன் ராஜீவ் கொலை 113 105
39 மணித்துளிகள்
40 ம் ஷோபா சக்தி நாவல் ஈழம் 168 140
41 விலங்குப் பண்ணை ஜார்ஜ் ஆர்வெல் நாவல் புனைவு 127 125
42 தூக்குமேடையில் தோழர் பாலு ஆர்.நல்லக்கண்ணு அரசியல் 20 15
43 ரோலக்ஸ் வாட்ச் சரவணன் சந்திரன் நாவல் புனைவு 158 150
44 ஊருக்கு செல்லும் வழி கார்த்திக் புகழேந்தி அனுபவம் 128 75
45 ஒரு சிறு இசை வண்ணதாசன் சிறுகதைகள் 160 140
46 உயிரே உயிரே மாலன் கட்டுரைகள் 108 100
47 பிம்பச்சிறை எம்.எஸ்.எஸ்.பாண்டியன் அரசியல் 248 225
48 பாலஸ்தீனம்- வரலாறும் சினிமாவும் இ.பா.சிந்தன் அரசியல் 191 150
49 சாப்ளினுடன் பேசுங்கள் எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் சினிமா 159 140
50 கொடக்கோனார்  அப்பண்ணசாமி நாவல் புனைவு 239 180
கொலை வழக்கு
51 நாளை மற்றொரு நாளல்ல சுப்ரபாரதி மணியன் கட்டுரைகள் 88 60
52 அய்யங்காளி டி.எச்.பி.செந்தாரசேரி வாழ்க்கை வரலாறு 56 40
தமிழில் மு.ந.புகழேந்தி
53 மாவீரன் சிவாஜி கோவிந்த் பன்சாரே சிவாஜி பற்றி 96 70
தமிழில் சி.நடேசன்
54 ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் அ.மார்க்ஸ் அரசியல் 158 160
55 ஆயில் ரேகை பா.ராகவன் பொருளாதாரம் 199 145
56 ஆரஞ்சு மணக்கும் பசி ஸ்டாலின் சரவணன் கவிதைகள் 96 85
57 புகைப்படக்காரன் பொய் கருணாகரன் நேர்காணல்கள் 160 150
சொல்ல முடியாது
58 மெரினா சுஜாதா புனைவு 94 90
59 அப்ஸரா சுஜாதா புனைவு 92 80
60 மோகினித்தீவு கல்கி புனைவு 88 80
61 செவக்காட்டு சொல் கதைகள் கழனியூரான் நாட்டுப்புற கதைகள் 208 140
62 பாலை நில ரோஜா கு.சின்னப்ப பாரதி நாவல் புனைவு 298 175
63 உழவுக்கும் உண்டு வரலாறு கோ.நம்மாழ்வார் விவசாயம் 128 100
64 மனிதனுக்குள் ஒரு மிருகம் மதன் கட்டுரைகள் 339 190
65 கர்ணனின் கவசம் கே.என்.சிவராமன் புனைவு 247 200
66 அந்தான் செகாவ் அந்தான் செகாவ் சிறுகதைகள் 320 230
67 காங்கிரிட் காடு அப்டன் சிங்க்ளர் நாவல் வரலாறு 352 280
தமிழில் ச.சுப்பாராவ்
68 கிருஷ்ணப் பருந்து அ.மாதவன் நாவல் புனைவு 128 120
69 அத்திப்பழங்கள் இப்போதும் ஆர்.விஜயசங்கர் அரசியல் கட்டுரைகள் 420 300
சிவப்பாகத்தான் இருக்கின்றன
70 பயணங்கள் முடிவதில்லை சோ.சுத்தான்ந்தம் வாழ்க்கை அனுபவம் 110 90
71 பேசுவதை நிறுத்திக் கொண்ட யமுனா ராஜேந்திரன் கட்டுரைகள் 147 130
சிறுவன்
72 கள்ளம் தஞ்சை பிரகாஷ் நாவல் புனைவு 222 200
73 முஸ்தபாவை சுட்டுக்கொன்ற அகரமுதல்வன் சிறுகதைகள் 111 100
ஓரிரவு
74 கருத்த லெப்பை கீரணூர் ஜாகிர்ராஜா நாவல் புனைவு 72 70
75 தூக்கிலிடுபவரின் குறிப்புகள் சசி வாரியர் அனுபவம் 272 220
76 தெரு விளக்கும் மரத்தடியும் ச.மாடசாமி கல்வி 88 80
77 செவ்வி தொ.பரமசிவன் நேர்காணல்கள் 144 130
78 மருத்துவக் ஆய்வுக்கூடங்களில் அ.உமர் ஹீலர் மருத்துவத்துறை 64 50
நடப்பது என்ன?
79 மக்கள் தோழர் கே.ஆர். எஸ் முல்லை வாசன் வாழ்க்கை வரலாறு 80 60
80 காரல் மார்க்ஸ் என்.ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு 32 15
81 கடலில் ஒரு துளி இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் 206 100
82 எனக்குரிய இடம் எங்கே? ச.மாடசாமி கல்வி 128 100
83 கு.அழகிரிசாமிகள் சிறுகதைகள் கு.அழகிரிசாமி சிறுகதைகள் 255 150
84 கையளவு கடல் மதுக்கூர் ராமலிங்கம் கட்டுரைகள் 160 130
85 ஆலயமும் ஆகமமும் சிகரம் ச.செந்தில்நாதன் சமூகம் 224 195
86 நவம்பர் 8 எஸ்.அர்ஷியா செல்லா நோட்டு 104 90
87 உலக நாடோடிக் கதைகள் எஸ்.ஏ.பெருமாள் சிறுகதைகள் 134 90
88 பசு பாதுகாப்பு - பாசிச அணிதிரட்டல் அ.பாக்கியம் மாட்டரசியல் 48 30
89 பெடரல், சமஸ்தான இந்தியா வெ.சாமிநாத சர்மா வரலாறு 63 40
90 பழங்குடி மக்களின் போராட்டங்கள் எஸ்.ஏ.பெருமாள் வரலாறு 32 20
91 கேலிக்குரிய மனிதனின் கனவு தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகள் 78 60
92 காத்திருந்த கருப்பாயி மலர்வதி நாவல்-புனைவு 88 80
93 ஹோ சி மின் வெ.மன்னார் வாழ்க்கை வரலாறு 64 60
94 கே.பி.ஜானகியம்மாள் என்.ராமகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு 32 15
95 வெண்மணியிலிருந்து சோலை சுந்தரப்பெருமாள் வாய்மொழி வரலாறு 144 100
96 ஒடுக்கப்பட்டோரின் குரலாய் பாப்பா உமாநாத் சட்டசபை உரைகள் 48 20
97 காந்தி புன்னகைக்கிறார் ஜா.மாதவராஜ் காந்தி படுகொலை 32 15
98 சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் தமிழில் - ச.வீரமணி நாடாளுமன்ற உரை 144 150
99 எது கல்வி? இரா.எட்வின் கட்டுரைகள் கல்வி 176 150
100 வீரம் விளைந்த்து நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி நாவல் புனைவு 505 300
தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன்
101 சீனப் பெண்கள் சின்ரன் சீனப் பெண்கள் பற்றி 316 280
தமிழில் ஜி.விஜயபத்மா
102 வரலாறு என்னை விடுதலை  ஃபிடல் காஸ்ட்ரோ நீதிமன்ற உரை 128 70
செய்யும் தமிழில் வீ.பா.கணேசன்
103 மகளிர் தினம் -  இரா.ஜவஹர் மகளிர் தினம் 80 60
உண்மை வரலாறு
104 விசாரணைகள் அருணன் தத்துவம், அரசியல் 288 180
105 சும்மா கிடந்த சொல்லை எடுத்து சு.பொ.அகத்தியலிங்கம் பட்டுக்கோட்டை 
கல்யாணசுந்தரம் பற்றி 96 80
106 சமவெளி வண்ணதாசன் சிறுகதைகள் 128 80
17885 13747



6 comments:

  1. நிலவழகன் சுப்பையாJanuary 2, 2018 at 10:59 AM

    நீங்கள் குறிப்பிட்டுள்ள பல புத்தங்கங்களை நான் படித்திருக்கின்றேன். ஒன்றை தவிர ஏனையவை பிடித்தவையே
    பிடிக்காதது --- நீர் - விநாயக முருகன்

    ReplyDelete
    Replies
    1. ஆம். "வலம்" அளித்த நிறைவு "நீர்" தரவில்லை

      Delete
  2. மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  3. மகிழ்ச்சி. அதில் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். இருப்பினும் அதைப் பற்றிய விமர்சனங்கள் இருந்தால் மகிழ்ச்சி. அன்புள்ள ஸ்ரீநாத்.

    ReplyDelete
    Replies
    1. பல நூல்களைப் பற்றி எழுதியுள்ளேன். நாளை அவற்றின் இணைப்பை அளிக்கிறேன்

      Delete
  4. I wholeheartedly wish u for ur tireless reading and journeys.let this year also be a knowledge gaining year by reading more books.

    ReplyDelete