Tuesday, October 15, 2024

கனடா கொலைகளும் அமித்ஷாவும்

 


கனடா இந்திய ஹைகமிஷனரையும் எட்டு தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

காரணம் என்ன?

சில மாதங்களாகவே கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கிற பிரச்சினைதான்.

கனடா குடிமகனான ஒரு சீக்கியர், காலிஸ்தானி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறவர், கனடாவிலேயே கொல்லப்படுகிறார்.

அக்கொலைக்கான உத்தரவு இந்திய அரசிடமிருந்துதான் வந்தது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் ஒரு சீக்கியர் கொல்லப்படுகிறார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்தே கொலைக்கான ஏற்பாடு நடந்தது அமெரிக்க காவல் துறை ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

கனடா நடத்திய விசாரணைக்குப் பிறகு அங்கே நடந்த கொலைக்கான ஏற்பாடுகள் இந்திய தூதரகத்தின் மூலமே செய்யப்பட்டது என்றும் அதற்கான உத்தரவை பிறப்பித்தது இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தெரிய வருகிறது.

வழக்கு விசாரணைக்காக தூதரக அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று கனடா அரசு கேட்டதற்கு இந்தியா மறுத்து விட்டது. அதன் எதிர்வினையாகத்தான் கனடா இந்திய ஹைகமிஷனரையும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

இந்தியாவும் அதே போல செய்துள்ளது.

இந்தியாவின் உள்துறை அமைச்சர், வெளி நாட்டு குடிமகனை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்று கனடாவில் இந்தியாவின் மானம் கப்பலேறியுள்ளது என்பதுதான் கொடுமையான யதார்த்தம்.

அமித்ஷா அப்படியெல்லாம் செய்வாரா என்றெல்லாம் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்த நேரத்தில் சொராபூதீன், பிரஜாபதி என்ற இருவர் மோடியை கொலை செய்யப்பார்த்தார்கள் என்று போலி எண்கவுண்டர் கொலைகள் செய்தவர்.

அந்த வழக்கினால் பலனடைந்தவர் கேரள ஆளுனராக இருந்த திரு சதாசிவம். அமித்தை அவர்தானே விடுதலை செய்தார்!

இந்தியா கனடா உறவு பாதிக்கப்படுகிறதே! அதனால் இந்தியர்கள்தானே மிகவும் பாதிக்கப்படுவார்கள்!

அதைப் பற்றியெல்லாம் மோடிக்கு என்ன கவலை! 

No comments:

Post a Comment