நேற்று முன் தினம் எழுதிய காரில் நாய்களுக்கு என்ன ஆய்வு? என்ற பதிவின் தொடர்ச்சி இது.
ஏ.டி.எம்
வாசலில் இரண்டு நாய்கள் படுத்துக் கொண்டு எழ
மறுக்கின்றன. கதவை திறக்க முடியவில்லை. கதவை சற்று தள்ளினால் ஆவேசமாக குரைக்க
தொடங்கி விட்டன. குரைத்து விட்டு மீண்டும் கதவின் மீது சாய்ந்து படுத்துக் கொண்டு விட்டன.
அந்த நேரத்தில் அந்த நாய்களை துரத்த வேறு எந்த வாடிக்கையாளர்களும் கூட வரவில்லை. கிட்டத்தட்ட
ஐந்து நிமிடம் இப்படியே கடந்தது. போலீஸ் லாக்கப்பில்
இருந்த ஒரு ஃபீலிங்.
நல்ல
வேளையாக மூன்றாவதாக ஒரு நாய் வர, அந்த நாயோடு இந்த இரண்டு நாய்களும் சண்டை போட செல்ல,
ஒரு வழியாக வெளியே வந்தேன், விடுதலையாகி.
வாஜ்பாய்
ஆட்சியில் நாய்க்கடிக்கான மருந்து உற்பத்தி
லவ்பெல்லால் தனியாருக்கு அளிக்கப்பட்டதையும் அதே வாஜ்பாய் ஆட்சியில் தெருநாய்களை கொல்லக்
கூடாது என்று மேனகா காந்தி சட்டம் போட்டதையும் இணைத்து பாருங்கள்.
தனியார்
உற்பத்தி செய்யும் நாய்க்கடி மருந்து விற்க நாமெல்லாம் நாய்க்கடி பெற வேண்டும்.
இந்த
வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக வேறு கொண்டாடுகிறார்கள். கொடுமை.
நாய்களைப் பற்றி எழுதியதால் ஒரு இரண்டு கால் துரோக, திருட்டு நாய் குரைத்து விட்டு போயிருக்கிறது.
ReplyDelete