Tuesday, October 29, 2024

யார் கொல்லப்படுவார்கள் யோகி?

 



உபி முதல்வர் மொட்டைச்சாமியார் இப்போது எல்லா கூட்டங்களிலும் “இந்துக்கள் பிளவு பட்டிருந்தால் கொல்லப்படுவார்கள்” என்று பேசிக் கொண்டிருக்கிறாராம். அவர் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தத்தான் அவ்வாறு பேசுவதாக ஆர்.எஸ்.எஸ் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 ஒற்றுமையைப் பற்றி பேசும் போது கொலைகளைப் பற்றி பேச வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. இந்துக்கள் கொல்லப்படுவார்கள் என்றால் யார் அவர்களை கொல்வார்கள்? எந்த இந்துக்கள் கொல்லப்படுவார்கள்? பாஜகவை ஆதரிக்கும் இந்துக்களா? அல்லது பாஜகவை எதிர்க்கும் இந்துக்களா?

 எங்களை ஆதரிக்காவிட்டால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று பாஜகவை எதிர்க்கும் இந்துக்களை மிரட்டுகிறாரா?

 அல்லது

 பாஜகவை ஆதரிக்கும் இந்துக்களை இவர்களே கொன்று மாற்று மதத்தவர்கள் மீது பழி போடப்போகிறார்களா?

 மொட்டைச்சாமியார் மோடிக்கு கொடுக்கும் திரிசூலமே ஒரு அழிவு ஆயுதம்தான். திரிசூலத்தின் ஒரு முனை இஸ்லாமியர்களையும் ஒரு முனை கிறிஸ்துவர்களையும் இன்னொரு முறை கம்யூனிஸ்டுகளையும் அழிக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளது.

 மொத்தத்தில் மாநில சட்டமன்ற தேர்தலுக்காக மத வெறி பிரச்சாரத்தை துவக்கியுள்ளார் மொட்டைச்சாமியார்.

No comments:

Post a Comment