அக்டோபர்
மாதத்தில் மட்டும் இதுவரை 85,790 கோடி ரூபாய் இந்தியப் பங்குச்சந்தை மூலமாக இந்தியாவிலிருந்து
வெளியேறி உள்ளது.
யார்
வெளியேறினார்கள்?
FII
என்று அழைக்கப்படுகிற அன்னிய நிதி நிறுவன முதலீட்டார்கள். இந்தியாவில் முதலீடு செய்வதை
விட இப்போது சீனாவில் கூடுதல் லாபம் கிடைக்கிறது
என்பதற்காக இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி சீனாவுக்கு போய் விட்டார்கள்.
கடந்த
மாதம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளே வந்ததால் சென்செக்ஸ் குறியீடு
அதிகமானதற்காக குதித்து கும்மாளமிட்ட பலரும் இப்போது சோகத்தில் மூழ்கும் நிலைமை.
ஆமாம்.
எப்போதுமே
அன்னிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறுவது என்பது புயல் போல, உள் நாட்டு சந்தைக்கு
சேதம் ஏற்படுத்தாமல் போகாது.
உள்
நாட்டு சேமிப்புக்களை வலுப்படுத்தாமல், உள் நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தாமல் வெளிநாட்டு
முதலீடுகளை நம்பியே இருப்பது எந்த நாட்டிற்கும் நல்லதல்ல. இந்திய ஆட்சியாளர்கள் இந்த
உண்மையை எப்போதுதான் உணருவார்களோ!
No comments:
Post a Comment