Thursday, October 17, 2024

சுமந்து பூமர் விங்கா?

 


சென்னையில் மழை நின்று போனதில் மக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் சங்கிகளுக்கோ வருத்தமோ வருத்தம்.

 


மழை தொடங்கும் முன்பே “மழை கடுமையாக பெய்தால் பலருடைய பெருமை கெட்டுப் போகும்” என்று திருவாய் மலர்ந்தவர் சுமந்து. மழை நீர் வெள்ளமாக மாறி மக்கள் அவதிப்பட வேண்டும், அதனால் தமிழக அரசின் பெயர் கெட்டுப் போகும் என்று ஆசைப்பட்டவர் அவர்.  சங்கிகளும் அதே மன நிலையில்தான் இருந்தார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அத்தனை பேரும் மழையை விட அதிகமான பதிவுகளை எழுதித்தள்ளினர். “கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் போவது போல போஸ் கொடுத்த” ஆட்டுக்காரன் வந்தால்தான் இந்த  சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதால் இந்தியன் 2 படத்தில் “கம் பேக் இந்தியன் தாத்தா” என்று சமூக ஊடகத்தில் இயக்கம் நடத்தியது போல “கம் பேக் அண்ணாமலை” என்று இயக்கம் நடத்த வேண்டும் என்றொரு காமெடி பதிவு கூட பார்த்தேன்.

 மழை நின்று போனது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. மழையும் நின்றது, பதிவுகளும் நின்றது.

 ஆனால் சுமந்துவால் முடியவில்லை. மழை வராது என்று வெதர்மேன் பிரதீப் சொன்னது போல நடப்பதை அவரால் சகிக்க முடியவில்லை.

 சில கட்சிகளில் டாக்டர்கள் அணி, வக்கீல்கள் அணி  என்று இருப்பது போல

இப்போதெல்லாம் “வெதர்மேன்” அணி கூட  வைத்துள்ளார்கள் என்று ட்வீட்ட,

வெதர் மேன் பிரதீப் சுமந்துக்கு செவுட்டுலயே ஒன்று கொடுத்தார்

  “நீங்க எந்த அணி சார்? பூமர் அணியா? எல்லாம் தெரிஞ்ச எக்ஸ்பெர்ட் அணியா? சும்மா நொய் நொய்ன்னுட்டு”

 


மழை நின்று போன சோகத்தில் இருக்கும் சுமந்து இப்படிப்பட்ட அசிங்கம் வேறு. பேசாமல் அவர் டாக்டர் வேலையை ஒழுங்காகப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment