நேஷனல்
டெமாக்ரடிக் அலையன்ஸ் என்று அழைக்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நரேந்தர் தாமோதர்தாஸ்
கோ அனுஷாசான் என்று காஞ்சிபரம் கடைசி சங்கராச்சார்யர் புதிய விளக்கம் கொடுத்துள்ளதாக
சொல்லும் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா, அனுஷாசான் என்பதற்கு புல்லரிக்கும் விரிவாக்கம்
ஒன்றையும் கொடுத்துள்ளது.
“நாட்டு
மக்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
அரசு நிர்வாகம்’ என்று அர்த்தம் சொல்கிறார்
பாண்டே.
அனுஷாசான்
என்ற ஒற்றை இந்தி/சமஸ்கிருத வார்த்தைக்குள் இவ்வளவு பெரிய அர்த்தம் அடங்கியிருக்கிறதா
என்ற ஆச்சர்யத்தில் இந்தி தெரிந்த ஒரு தோழரிடம்
கேட்டேன். அனுஷாசான் என்றால் ஒழுக்கம் என்று
அர்த்தம் என அவர் தெளிவு படுத்தினார்.
முத்து
திரைப்படத்தில் மீனா “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ” என்று ரஜினியிடம் சொல்லி விட்டு
“கள்ளிப்பட்டிக்கு எப்படி போகனும்” என்பதற்கு மலையாளத்தில் அப்படித்தான் கேட்க வேண்டும்
என்று சொல்லி ரஜினிகாந்திற்கு அடி வாங்கிக் கொடுத்து பிறகு பிராந்தன் (பைத்தியம்) என்று
சொல்லி தப்பிக்க வைப்பார்.
ஒழுக்கம்
என்ற வார்த்தைக்கே அருகதையற்ற மோடி அரசுக்கு நீண்ட நெடிய சம்பந்தமே இல்லாத அர்த்தத்தைச்
சொல்லி நம்மை பிராந்தனாக்கப் பார்க்கிறார் ரங்கராஜ் பாண்டே.
ஆமாம், மோடி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோருக்கும் ஒழுக்கம் என்பதற்கும் என்ன சம்பந்தம்!
No comments:
Post a Comment