இரண்டு நாட்கள் முன்பாக திருவள்ளூர் அருகே நடந்த ரயில் விபத்து எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. உயிரிழப்பு இல்லையென்பதால் சிறு நிம்மதி.
மோடியின் ஆட்சிக்காலத்தில் ரயில் விபத்துக்கள் மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டதால் அதிர்ச்சி ஏற்படுவதே இல்லை.
ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது, வந்தே பாரத் என்று அதி உயர் கட்டண ரயில்களை அறிமுகம் செய்து கல்லா கட்டுவது, ரயில் நிலையங்களில் லட்சக்கணக்கில் செல்ஃபி பாய்ண்ட் என்ற பெயரில் மோடியின் மூஞ்சிக்கு விளம்பரம் தேடுவது ஆகியவற்றில் காண்பிக்கும் அக்கறையை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கோ, பயணிகளின் வசதிகளுக்கோ காண்பிப்பதில்லை.
ரயில் விபத்துக்களை தவிர்ப்பதற்கான "கவச்" தொழில் நுட்பம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, கற்றுக் கொள்ள விரும்பாத கையாலாகாத அரசு மோடியின் அரசு. இதிலே இத்துறை அமைச்சர் வேறு பயங்கர புத்திசாலியாம்.
இந்த புத்திசாலித்தனம் எப்படி பயன்படுகிறது?
திருவள்ளூர் - கவரப்பேட்டை விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச்செயல் இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறோம் என்று பொய் சொல்லி கையாலாகாததனத்தை திசை திருப்புவதில் பயன்படுத்துகிறது.
ஆம்.
இப்போதெல்லாம் எந்த ரயில் விபத்து என்றாலும் சதிச்செயல் என்று பேசி மோடி அரசு தன்னுடைய செயலற்ற தன்மைக்கு "கவச்" போட்டுக் கொள்கிறது.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete