Wednesday, October 16, 2024

அருமையான, அதிசயமான,அற்புதமான புகைப்படம்

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பகிர்ந்து கொண்ட பதிவையும் புகைப்படத்தையும் அவருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த புகைப்படத்தைக் கண்டு நீங்களும் நிச்சயம் அதிசயிப்பீர்கள்.

இதோ தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் பதிவு

புகைப்பட கலைஞர் ஆண்டிரியு மெக் கேர்த்தியின் பிரமிக்கவைக்கும் படம்

சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) பூமியில் இருந்து 400கிமி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது, அது நொடிக்கு 8கிமி வேகத்தை சென்றுகொண்டிருக்கிறது (அதாவது மணிக்கு 28,800 கிமி ) அது நிலவை கடக்கும் தருணத்தில் அதனை படம் பிடிக்க திட்டமிடுகிறார். இத்தனை வேகமாக கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் பிடிப்பது அத்தனை சாதாரன விசயம் அல்ல, அதற்கு நிறைய இயற்பியலும் கணிதமும் வேண்டும், நிலவின் சுற்றுப்பாதை குறித்த கச்சிதமான கணக்குகள் வேண்டும்...

0.05 நொடிகள் தான் இந்த மொத்த காட்சியும் நிலைக்கும் அதற்கும் மிக கச்சிதமாக இந்த நொடியை தனது காமிராவில் உறையவைக்க வேண்டும். இந்த வரலாற்று புகைப்படத்தை அத்தனை சிரத்தையும் படம் பிடித்துள்ளார் புகைப்பட கலைஞர் ஆண்டிரியு மெக் கேர்த்தி.

அசாத்தியத்தை சாத்தியமாக்குவது தான் மனித மனம், இந்த செயலை செய்து முடிக்கும் போது கேர்த்தி எப்படி உணர்ந்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். Hugs and Kisses Andrew McCarthy...

இதோ அந்த புகைப்படம்




No comments:

Post a Comment