Monday, October 14, 2024

இந்தியர்கள் செத்தாலும் இஸ்ரேல் பக்கம்தானா மோடி?

 


இஸ்ரேலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் வளாகத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்று இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவுகளை தகர்த்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு அமைதிப் படையின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. தீவிரவாத இயக்கங்கள் கூட செய்யத் துணியாத, தயங்குகிற ஒரு வேலையை இஸ்ரேல் ராணுவம் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை லெபனானை விட்டு வெளியேறாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்து விடுவேன் என்று சொல்லியுள்ளார்,

இஸ்ரேல் குரைக்கும் நாய் அல்ல, கடிக்கும் நாய்.

நெதன்யாகு தான் மிரட்டியது போல செய்யக்கூடிய ஆசாமிதான்.

இதிலே மோடி எங்கே வருகிறார் என்ற கேள்வி எழலாம்.

லெபனானில் செயல்படும் ஐ.நா அமைதிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.  இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் 903 பேர் உள்ளனர். இஸ்ரேல் தாக்கினால் அவர்களும் செத்துப் போவார்கள்.

மோடிக்கு இது ஏற்புடையதுதானா?

மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாலஸ்தீனம் உபட இஸ்ரேலின் மண்ணில் கால் வைக்கக் கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இத்தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் 125 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா.

இன்னொன்று.

ஆம். அது இந்தியாதான்.

இஸ்ரேல் என்ன அராஜகம் செய்தாலும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாவை மாற்றி விட்டது மோடியின் அரசு.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய மனிதப் பிறவியா மோடி?

அப்படிப்பட்ட கவலையெல்லாம் இருந்திருந்தால் உளவுத்துறை எச்சரித்தும் 44 வீரர்களை புல்வாமாவில் சாகவிட்டிருப்பாரா?

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடையாளத்தோட வாடா அனாமதேயஜி நாய்ஜி

      Delete