Tuesday, October 22, 2024

ஆகம விதி – திருப்பதியிலும் மதுரையிலும் . . .

 


      திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணத்தை வெளியூர்களில், வெளி நாடுகளில் நடத்துவது பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.

 மேலே உள்ள செய்தியை பலரும் பார்த்திருப்பீர்கள்.  மிகவும் பழைய செய்திதான்.

 இந்த நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்று தடை கேட்டு போடப்பட்ட வழக்கு பற்றி     எத்தனை பேருக்கு தெரியும்?

 என்ன பிரச்சினை?

 அறங்காவலர் குழுவின் தலைவரான திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன் அவர்கள் செங்கோலை பெற்றுக் கொள்ளக் கூடாதாம்.

ஏனாம்?

 அது ஆகம விதிகளுக்கு எதிரானதாம்.

 எப்படியாம்?

 திருமதி ருக்மனி பழனிவேல்ராஜன் கணவனை இழந்தவராம். அதனால் அவர் செங்கோலை பெறுவது ஆகம விதிகளுக்கு எதிரானதாம்.

 


ஆகம விதிகளில் அப்படியெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை என்று சொல்லி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

 அவர் ஒரு கைம்பெண். அதனால் அவர் செங்கோல் பெறக்கூடாது என்று சொல்லும்  அதே நேரத்தில் மனைவியை ஒதுக்கி வைத்து விட்டு அதை பிரதமராகும் முன்பு வரை மறைத்து வாழ்ந்த மோடியிடம் செங்கோலை ஒப்படைக்க தமிழ்நாட்டிலிருந்து ஒரு சாமியார் கூட்டமே ஃப்ளைட் பிடித்து டெல்லிக்கு போனது என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 திருப்பதியில் உற்சவ மூர்த்திகளை  பிரதி எடுத்து வெளி நாடுகளுக்கு எடுத்துச் செல்வதை கண்டு கொள்ளாத ஆகம விதிகள், கணவரை இழந்த பெண் செங்கோல் பெறுவதை மட்டும் எதிர்க்கிறதென்றா அது ஆகம விதி அல்ல, ஆணாதிக்க விதி.

No comments:

Post a Comment