காலி செய்து விட்டு காவியா?
உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.
அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த முயற்சியும் எடுத்தது இல்லை.
பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.
4 ஜி சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.
“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.
தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.
“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.
No comments:
Post a Comment