Monday, September 30, 2024

15 வருடம் – 8000 – ஓயாது அலைகள்

 


இது என்னுடைய எட்டாயிரமாவது பதிவு.

என்ன எழுதலாம் என்று யோசித்தேன்.

வலைப்பக்க அனுபவத்தையே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

2009 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வலைப்பக்கம் தொடங்கி ஒரு பதிவு எழுதினேன். தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்காத காரணத்தால் மக்களை  திட்டி ஒரு பதிவு எழுதி ஒரு பூட்டு போட்டு பூட்டி விட்டேன்.

2010 ம் ஆண்டு ஒரு விபத்து. காலில் ஜவ்வு கிழிந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பில் இருக்க நேரிட்டது. அப்போது பொழுதை போக்க வலைப்பக்கத்தை தூசி தட்டி எழுதத் தொடங்கினேன்.

எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது, அதற்கான நியாயங்கள், எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயல்பாடுகள், சில அனுபவங்கள் என்று எழுதத் தொடங்கியது பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து எழுதும் அளவு விரிவடைந்தது.

நான் நம்புகிற பொது உடமைத் தத்துவம், நான் நேசிக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கற்றுக் கொடுத்ததன் அடிப்படையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகுவது என்ற முறையில் பதிவுகளை எழுதத் தொடங்கிய பின்பு  பதிவுகள் குவியத் தொடங்கியது.

தமிழ் மணம் திரட்டி செயல்பட்டு வந்து வரை அதிலே வரிசைப் பட்டியலில் இடம் பிடிப்பது, ஒவ்வொரு நாளும் வெளியாகும் டாப் பத்து பதிவுகளில் இடம் பெறுவது ஆகியவையெல்லாம் மிக்க உற்சாகம் அளித்தது. தமிழ் மணம் செயலிழந்ததும் பார்வைகளின் எண்ணிக்கையில் கொஞ்சம் சரிவு இருந்தது. அது ஒரு வருட காலம்தான். வாட்ஸப் குழுக்களில் பதிவை பகிர்வது அந்த இழப்பை ஈடு செய்தது.

பெரும்பாலும் அரசியல் பதிவுகள்தான். பதிவுக்கு பொருத்தமான படத்தை தயார் செய்ய பெரும்பாலும் உதவுவது வடிவேலுதான். அரசியல் பதிவுகளைத் தாண்டி நான் ரசித்த இசை, முயற்சித்த சமையல்கள் ஆகியவையும் வந்துள்ளது. கிட்டத்தட்ட எண்பது புத்தகங்களுக்கு அறிமுகம் எழுதியது நிறைவைத் தந்துள்ளது.

ஜெயமோகன், மாலன் போன்றவர்களின் போலித்தனத்தை தோலுரிப்பது என்பது மிகவும் விருப்பமான ஒன்று.

கிட்டத்தட்ட ஒரு ஐநூறு பதிவுகளாவது அடுத்தவர்கள் எழுதியதாக இருக்கும். அடுத்தவர் பதிவை தன் பதிவாக காண்பிக்கும் சிறுமையை எந்நாளும் செய்ததில்லை. ஒரிஜினலாக எழுதியவர்களுக்கு நன்றி சொல்லியே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலை என்பது போல அனாமதேயங்கள் தொல்லையும் சமயத்தில் எரிச்சல் ஊட்டும். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத பாடி சோடாக்கள் போல சில அனாமதேயங்கள் யார் என்பதும் தெரியும். அதில் ஒருவரின் குடும்ப வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறேன். இன்னொருவரின் வேலையை காப்பாற்றியுள்ளேன். ஆனாலும் . … நன்றி மறந்த துரோகிகளும் உலாவும் உலகல்லவா இது!

இன்றைக்கு வலைப்பக்கம் எழுதுவதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் உள்ளது.

இந்தியாவிற்கு நேர்ந்த மிகப்பெரிய துயரம் மோடி ஆட்சியில் தொடர்வது. மத வெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அந்த மோசமான சக்திகளை, அவர்களின் அராஜக செயல்களை, கேவலமான பொய்களை அம்பலப் படுத்துவதுதான். ஒவ்வொரு நாளும் எழுதுவதற்கான செய்திகளை சங்கிகள் அளித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியாவில் சமூக மாற்றம் உருவாகும் வரை என் பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எழுத்து அலைகள் என்றும் ஓயாது.

15 comments:

  1. 8000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Congratulations comrade.... 8000 என்று தான் என்று கடந்து போய்விட முடியாது. நாள் ஒன்று என பார்த்தால் கிட்டதட்ட 22 ஆண்டுகள்... மிகவும் பிரமிப்பு., வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
  3. It shows your commitment. Propagating progressive ideas through social media is an important work. Many of us spend much time in social media but fail to work in focussed manner. You proved how we can work and create useful debate in the same. Congratulations .

    K Swaminathan

    ReplyDelete
  4. *Congratulations Raman*

    It is really a tough job. Achieving 8000 posts in 15 years in your blog shows your commitment and hard work.

    Many of us spend a lot of time on social media without productive results. You have set an example how to use social media to propagate progressive ideas and create constructive debates on the current issues.

    I am one of the regular followers and admirers of your posts.

    Wishing you to maintain tempo and achieve a 5 digit mark soon.

    *K Swaminathan*

    ReplyDelete
  5. தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நானும் வலைப்பக்கத்தில் 2009 ஆண்டு தொடங்கி பத்து ஆண்டுகள் எழுதி வந்தேன். ஆனால் தங்களைப்போல் தொடர்ந்து எழுத இயலவில்லை. தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை! தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி. அலை தொடர்ந்து அடிக்கட்டும்

    ReplyDelete
  6. மேலே உள்ள கருத்தை எழுதும்போது Google Account மூலம் எழுத மறந்துவிட்டேன்.அதனால் Anonymous என்றே இருக்கும்.
    வே.நடனசபாபதி

    ReplyDelete
  7. சூப்பர் தோழர். பல நேரங்களில் உங்களின் பதிவுகள் புது அரசியல், தொழிற்சங்க வெளிச்சத்தை அளித்துள்ளன.
    தொடரட்டும் தங்களது எழுத்துப் பணி.
    -ப.முத்து, தி.மலை

    ReplyDelete
  8. தங்களின் இச்சேவை தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Congrats!!. Keep going

    ReplyDelete
  10. பிரமிப்பை ஏற்படுத்தும் விஷயம ...தோழர். தங்களின் தொடர் உழைப்புக்கும். பல விஷயங்களை எப்படி அணுகுவது என தெளிவு ஏற்படுத்திய மறைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவிக்கிறேன். தங்கள் பணி தொடரவும். சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்ளைத் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள்,
    வலை விரியட்டும் இன்னும் வேகத்துடன்,
    இன்று சிக்கினால் உங்கள் வலையில்,
    சிக்காதவர் நாளை யார் வீட்டு உலையில்?

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் ராமன்

    ReplyDelete