#UNResolution #Gaza #IndiaSupportGenocide
* காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்,
* பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பது சட்டவிரோதம்,
* பாலஸ்தீனப் பகுதியில் சட்டவிரோத யூதக் குடியிருப்புகளைக் கட்டியது தவறு,
* இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்கக் கூடாது,
* ஐநா சபையும் இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்புப் பகுதிகளை அங்கீகரிக்கக் கூடாது,
* இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பாளர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது இஸ்ரேலின் கடமை,
* கிழக்கு ஜெருசலேம் முழுவதும் பாலஸ்தீனப் பகுதியாக இஸ்ரேல் ஏற்றுக்கொள்ள வேண்டும்,
* காஸாவில் இஸ்ரேல் ஏற்படுத்திய அனைத்து இழப்புக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்,
* பாலஸ்தீனத்தை இவ்வளவு ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருப்பதால் அம்மக்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்ய வேண்டும்
* இஸ்ரேலுக்கு உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார தடை விதிப்பது குறித்து யோசிக்க வேண்டும்
உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளையும் கட்டளைகளையும் முன்வைத்து ஐநா சபையின் பொதுசபையில் கடந்த வாரம் (13, செப்டம்பர், 2024) அன்று ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
124 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் இத்தீர்மானம் பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இது ஐநாவின் பொதுசபையில் நிறைவேற்றப்பட்டதால், இஸ்ரேலைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகள் பாலஸ்தீனர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக இருக்கின்றன என்பது மிகமுக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அமெரிக்காவுகு வீட்டோ அதிகாரம் மட்டும் இல்லையென்றால், இதே சட்டத்தை ஐநாவின் மனித உரிமை ஆணையத்திலும் நிறைவேற்றி இஸ்ரேலை கதிகலங்க வைக்கலாம். ஆனால், அமெரிக்கா என்கிற ஒற்றை நாடு இதற்கு தடையாக இருக்கிறது.
சரி, நம் கதைக்கு வருவோம். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களித்த அந்த 124 நாடுகளில் இந்தியாவும் இருக்கிறதா? என்றால்...
இல்லை.
இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்தில் வாக்களிக்க முடியாது என்று சொல்லி, வாக்கெடுப்பில் இருந்து இந்தியா வெளியேறிவிட்டது.
அதாவது இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பாலஸ்தீனத்தில் கொல்லப்படுவதை இந்த படுமோசமான பாசிச இந்திய அரசு வெளிப்படையாகவே ஆதரித்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வேதனை…
இஸ்ரேல் அரசோடு ஆயுத விற்பனை உட்படஏராளமான டீலிங்குகளை செய்துள்ளார் மோடி. எதிர்க்கட்சிகளை உளவு பார்க்கும் பெகாஸஸ் மென் பொருள் கூட இஸ்ரேல் அளித்தது.
பாலஸ்தீனர்களின் இன்னல்களை விட இஸ்ரேலுடன் செய்து கொண்டுள்ள டீலிங்குகள்தான் முக்கியம் . . .
No comments:
Post a Comment