நேற்று மாலையும் இன்று காலையும் வலைப்பக்கத்திற்கு வர முடியவில்லை. அதனால் மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணு விஷயம் பல பல கட்டங்களை தாண்டி விட்டது.
பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான காவி ஆடுகள் ஊடுறுவி உள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. ஜாதிக்கயிறுகளை அகற்ற வேண்டும் என்ற நீதியரசர் சந்துருவின் பரிந்துரையை சங்கிகள் எதிர்க்கும் வேளையில் அன்பில் மஹேஷ் பொய்யாமொழியின் கையில் பச்சைக் கயிறு இருப்பது நெருடலாகவே உள்ளது. முதல்வர் தன் நண்பன் மகனை விலக்கி வைப்பது நல்லது.
நிற்க . . .
அந்த டுபாக்கூர் மஹாவிஷ்ணுவின் பேச்சு மொழி, உடல் மொழி, ஆணவம், அணுகுமுறை, திமிரான தோரணை எல்லாமே அப்படியே ஆட்டுக்காரனை பார்ப்பது போலவே இருக்கிறது. தோற்றம், உடை எல்லாமும் கூட அப்படித்தான்.
ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா இருப்பாங்களோ?
புலனாய்வுப் புலிகள் புல்லை மேய்வதற்குப் பதில் இதனை துப்பறியுங்களேன் . . .
No comments:
Post a Comment