பெங்களூரில் ராமேவரம் கபே என்ற உணவு விடுதியில் குண்டு வெடித்த போது, கர்னாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஷோபா, தமிழ்நாட்டில் இருந்து வந்து குண்டு வைத்தார்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் பிறகு சில பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.
அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அமைச்சர் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் மன்னிப்பு கேட்பது, பிரமாண வாக்குமூலம் மூலம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பது ஆகிய இரண்டையும் அமைச்சர் செய்தால் வழக்கை முடித்துக் கொள்ளலாமா என்று நீதிபதி கேட்கிறார்.
அப்படி சொன்னவுடன் அமைச்சரின் வழக்கறிஞருக்கு கோபம் வந்து விட்டது. நீதிமன்றத்திற்கு பிரமாண வாக்குமூலம் கொடுத்து வேண்டுமானால் மந்திரி மன்னிப்பு கேட்பாரே தவிர பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டார் என்று உறுதியாக சொல்லி விட்டார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பொதுக்கூட்டங்களிலும் இவர் அவதூறு செய்வாராம், ஆனால் மன்னிப்பை மட்டும் ரகசியமாகக் கேட்பாராம்.
இதென்னங்கடா நியாயம்!
அவதூறு செய்யும் அயோக்கியர்களை எல்லாம் மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் உட்கார வைத்து ஊர்வலம் விட வேண்டும். அந்த அவதூறுகளை வெளியிடுகிற மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியர்களையும் கூட. அவர்களையெல்லாம் செத்துப் போகும் வரை ஜெயிலில் அடைத்தால் கூட தகும். வாட்ஸப்பில் பரப்புபவர்களின் போனை பறித்து உடைத்து விட வேண்டும்
பிகு: மோடி கேட்ட மன்னிப்பு பற்றி அடுத்த பதிவில். . .
No comments:
Post a Comment