வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிற "வாழை" திரைப்படம் தன்னுடைய கதை என்று சங்கி எழுத்தாளர் சோ.அதர்மன் சொல்லியதாக ஒரு செய்தியை படித்து அவரது முகநூல் பக்கம் சென்றேன்.
அந்த "வாழையடி வாழை" கதை சரியான மொக்கை கதை.
இப்பதிவின் நோக்கம் அதுவல்ல . . .
தமிழக அரசு அறிவித்த "கனவு இல்லம்" திட்டத்தின் படி அவரது "சூல்" நாவலுக்கு விருது கொடுத்தமைக்காக வீட்டிற்கான பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழங்கிய போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.
சுச்சி நாயக்கர், சின்னாதுரை, மூக்கா என்று மூன்று பாத்திரங்களை உலவ விட்டு அவர்களை மிக மோசமானவர்களாக சித்தரித்திருப்பார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரை புனைவுப் பெயர் வைத்து தாக்கியதில் நூலின் பாதி பக்கங்கள் கடந்து போகும். ஆஜான் இல்லையில்லை கடலூர் சீனு இதற்காகத்தான் சாகித்ய அகாடமிக்கு பரிந்துரைத்தார்.
இந்த நூலைப் பற்றி தெரிந்திருந்தால் முதல்வர் நேரடியாக சோ.அதர்மனுக்கு பத்திரங்களை கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். குறைந்தபட்சம் கவிஞர் கனிமொழியாவது ஒரு இலக்கியவாதி என்ற முறையில் அந்த நாவல் பற்றி சொல்லியிருக்க வேண்டும்.
அரசு அறிவித்த வீட்டை தருவதை தவிர்த்திருக்க முடியாது. ஆனால் முதல்வர் கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். ஒரு பஞ்சாயத்து வார்ட் கவுன்சிலர் கொடுப்பது கூட வொர்த்தில்லை. போஸ்ட்டில் அனுப்பி இருக்கலாம்.
No comments:
Post a Comment