கடந்த வாரம் மஹாராஷ்டிராவில் நடந்த சம்பவம் இது.
ஷாஜி அஷ்ரப் முனாவர் என்ற 70 வயது முதியவர் மகள் வீட்டிற்குச் செல்ல ரயில் ஏறியுள்ளார். அவர் கையில் உள்ள பாத்திரத்தில் எருமைக்கறி இருந்துள்ளது. அந்த மாநிலத்தில் எருமைக்கறிக்கு அனுமதி உண்டு.
காலியாக இருந்த பெட்டியில் ஏறிய பனிரெண்டு இளைஞர்கள் முதியவர் முனாவரோடு வம்பிழுத்துள்ளனர். அவர் பசு மாட்டுக் கறி வைத்திருப்பதாகச் சொல்லி அவரை தாக்கத் தொடங்கி விட்டனர். அடிப்பது, அசிங்கமாக திட்டுவது, காலால் உதைப்பது என்று அனைத்து சித்திரவதைகளையும் செய்துள்ளனர். தான் வைத்திருப்பது எருமைக்கறிதான் என்று சொல்லி அவர் கெஞ்சினாலும் காது கொடுக்க தயாரில்லை. அவர் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தும் இறங்கவிடவில்லை. பஜ்ரங் தள் (ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குண்டர் படை) அழைக்கட்டுமா, அவர்கள் வந்தால் உன்னை கண்டந்துண்டாமாக வெட்டி விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார்கள்.
தாக்குதலைப் பற்றிய காணொளியை எம்.ஐ.எம் கட்சியின் எம்.பி சமூக ஊடகங்களில் உலவ விட்ட பின்பே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதன் பின்பே மஹாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. நடந்தது கொலை முயற்சி என்பதை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்று குடும்பத்தினர் வருந்துகின்றனர்.
மாறாக பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புதான் கிடைத்துள்ளது.
முகமது அக்லக்கை கொன்றவர்களுக்கு என்.டி.பி.சி யில் வேலை கொடுக்கப்பட்டதையும் அவர்களை மந்திரி ஜெயந்த் சின்ஹா மாலை போட்டு வரவேற்றதையும் மறக்க முடியுமா என்ன!
No comments:
Post a Comment