Tuesday, September 10, 2024

முடிவெடுக்க தாமதமேன் நிர்மலா மேடம் ???

 


ஜி,எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி அகற்றப் படும் அல்லது குறைக்கப்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் நேற்றைய கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களின் குழு ஒன்று விவாதித்து 50 நாளில் ( 50 நாளுக்குள் முன்னேற்றம் இல்லையென்றால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்று செல்லா நோட்டு சமயத்தில் நான்-பயாலாஜிகல் குழந்தை சொன்ன வஜனம்தான் 50 நாள் என்றாலே நினைவுக்கு  வந்து தொலைக்கிறது) பரிந்துரை அளிக்க வேண்டும் என்றுதான் முடிவெடுத்துள்ளது.

ஆயுள் இன்சூரன்ஸ் மற்றும்  மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்திற்கான 18 % ஜி.எஸ்.டி  நியாயமா இல்லையா என்று முடிவெடுக்க எதற்கு ஒரு குழு?

ஆளும் கட்சி மந்திரி உட்பட பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.டி கூடாதென்ற ஒருமித்த கருத்து உடையவர்கள்தான். 

பிறகு எதற்கு ஆய்வு, மண்ணாங்கட்டி எல்லாம்?

மோடி, நிர்மலா அம்மையார் கூட்டணியை போல் மக்கள் விரோதிகள் யாரும் கிடையாது. எந்த பலனாக இருந்தாலும் முதலாளிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டுமென்ற சிந்தனை கொண்ட தரகர்கள்.

அகற்றவோ அல்லது குறைக்கவோ முடியாதென்று சொன்னால் அதுவே ஹரியானா, காஷ்மீர், மஹாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பதால் ஒரு குழு அமைத்து சமாளித்துள்ளார்கள்.

ஒரு பிரச்சினைக்கு தீர்வு கண்டு பிடிக்காமல் அதை கிடப்பில் போட செய்யும் முயற்சிக்கு பெயர்தானே குழு அமைப்பது!

என்ன! ஜி.எஸ்.டி அகற்றல் கோரிக்கையை வலியுறுத்தும் எங்கள் சங்கத்தின் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 


1 comment:

  1. மைனாட்டி ஆட்சி என்பதால் அடுத்த கூட்டத்தில் முடிவு,
    மெஜாரிட்டி என்றால் நினைத்து பாருங்கள் எப்படிப்பட்ட பதில் வந்திருக்குமென்று?

    ReplyDelete