சங்கிகள் அனைவரும் அடி முட்டாள்கள் அல்லது அயோக்கியர்கள் என்ற என் மதிப்பீட்டை அவ்வப்போது அவர்கள் நிஜமாக்கிக் கொண்டே இருப்பார்கள்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைந்ததற்கு தெய்வக்குழந்தை ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தது. இதெல்லாம் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று யார் அழுதார்கள்! அதிலே ஒரு படம் போட்டிருந்தது.
அந்த ட்விட்டர் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த சங்கிகள் அனைவருமே தோழர் யெச்சூரியை வசை பாடியிருந்தார்கள். மேலே உள்ள படத்தின் மூலம் தோழர் யெச்சூரியின் இறப்பினால் உருவான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு மோடியை பாராட்டவும் செய்திருந்தார்கள். யார் கண்டது இயற்கையாக பிறக்காத ஜந்துவிற்கும் கூட அப்படி ஒரு நோக்கம் இருந்திருக்கலாம். இந்தியாவின் மிகக் கேவலமான ஜந்துவல்லவா அது!
இதையெல்லாம் பதிவாக்க வேண்டுமா என்று இருந்த என்னை இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழு கடுப்ப்பேற்றி விட்டது.
தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அவர் பயின்ற, ஒரு மாபெரும் தலைவராக உருவான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அஞ்சலி செய்யப்பட்ட படத்தை போட்டு மூன்று பதிவுகள்.
ஸ்வப்பெட்டியை பார்த்த அயோக்கி சங்கிகள் அவரை கிறிஸ்துவராக மதம் மாற்றி விட்டார்கள். ஒரு பதிவு உடனே நீக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு பதிவுகள் அப்படியே உள்ளது. ஒன்றில் மட்டும் அடிமுட்டாள் சங்கிகள், தங்களுக்கு புகட்டப்பட்ட நச்சை வாந்தியெடுத்துக் கொண்டு உள்ளார்கள்.
சங்கிகளுக்கு எதிராக யாராவது எப்போதாவது பதிவு போட்டால் அதில் ஏதாவது சொத்தை எதிர்வாதத்தை சங்கிகள் வைத்தால் அவர்களுக்கு ஆதரவாக "நீதி, நேர்மை, நியாயம் என்றெல்லாம் வஜனம்" பேசிக்கொண்டு உடனே ஓடி வரும் மாடரேட்டரை ஏனோ காணவில்லை.
இன்னொன்றும் கூட நடந்தது. அதே குழுவில் ஒரு தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு அஞ்சலி செலுத்தியிருந்தது. அந்த பதிவுக்கு சிரித்து வைத்த ஒரு சங்கி "அடுத்து பிரகாஷ் காரத்" என்று பின்னூட்டம் போட கடுப்பில் "மோடி" என்று பதில் போட்டிருந்தேன்.
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது.
எப்படி தந்தை பெரியார் மறைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலானாலும் சங்கிகளை அச்சுறுத்துகிறாரோ அவர் போலவே சங்கிகளை தோழர் யெச்சூரியும் அச்சுறுத்துகிறார். சங்கிகளின் வெறுப்பே தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அர்த்தமிக்க, மக்களுக்கான, மக்கள் ஒற்றுமைக்கான வாழ்வை வாழ்ந்துள்ளார் என்பதன் அடையாளம்.
No comments:
Post a Comment