திருப்பதி லட்டு சர்ச்சையில் தமிழ்நாட்டு நிறுவனம் ஒன்றின் மீதுதான் குற்றம் சுமத்தப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் ஹெரிட்டேஜ் நிறுவனத்திற்கு திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பும் ஒப்பந்தம் கிடைப்பதற்காகத்தான் இந்த சர்ச்சை உருவாக்கப்பட்டது என்பதுதான் பெரும்பாலானவர்களின் சந்தேகம்.
குஜராத் ஆய்வக அறிக்கை என்பதால் அமுல் நிறுவனமும் லட்டுக்கு நெய் அனுப்பும் போட்டியில் உள்ளதா என்றொரு சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அமுல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எங்க நெய்யெல்லாம் ரொம்ப தரமானது. ஆனா நாங்க திருப்பதி லட்டு செய்ய நெய் அனுப்பியதே இல்லை என்று சொல்லியுள்ளது அமுல்.
இது வரை அமுல் நெய் திருப்பதி லட்டுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அதையே அறிக்கை விட்டது கூட சரி, அந்த அறிக்கையில் தங்கள் நெய்யின் நிறம், திடம், குணம், மணம் பற்றியெல்லாம் த்ரீ ரோஸஸ் விளம்பரம் போல சொல்ல வேண்டும்! இதுதான் அமுல் மீது சந்தேகத்தை எழுப்புகிறது.
பார்ப்போம் முதலமைச்சரின் நிறுவனமா? குஜராத் நிறுவனமா? லட்டுக்கு நெய் அனுப்பப் போவது யாரென்று!
அட கடவுளே!
ReplyDeleteஇது என்ன ரமணா திரைப்பட முட்டை காண்ட்ராக்ட் விட மோசமா இருக்குதே!