Thursday, September 5, 2024

சிவாஜி என்பதால் மன்னிப்பா மோடி?

 


மோடி கைய வச்சா அது ராங்கா போகுமடா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப

மோடி பிராணபிரதிஸ்தான் செய்த ராமர் கோயிலில் கர்ப்பகிரகமே ஒழுகிறது.

மோடி பல்லாயிரக்கணக்கான கோடி செலவில் கட்டிய புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மக்களவயின் மையப்பகுதியில் மழை வந்தால் தண்ணீர் தேங்குகிறது.

ஜி-20 உச்சி மாநாட்டுக்காக சில நூறு கோடிகளில் கட்டிய புதிய மண்டபத்தில் வெளி நாட்டு அதிபர்கள் குடைகளோடு நடமாடும் அளவிற்கு மழை மண்டபத்திற்கு உள்ளேயும் கொட்டியது.

பீஹாரில்  மோடி திறந்து வைத்த   பாலங்கள் விழுந்து கொண்டே        இருக்கிறது.

விமான நிலயங்களும்      மோடியின் சிறப்புக்கு விதி விலக்கல்ல. இந்தோர், டெல்லி விமான நிலையங்கள் கண்ணீர் வடிக்கின்றன.

அநேகமாக ஸ்டேட்டுக்கே ஓப்பி யுனிட்டி  கூட சில மாதங்களில் பல்லிளிக்கலாம்.

இத்தனை நிகழ்வுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்காத மோடி இப்போது சத்ரபதி சிவாஜி சிலை தகர்ந்து நொறுங்கிய போது மட்டும் ஏன் மன்னிப்பு கேட்டார்.

 காரணம் ஒன்றுதான்.

 


சிவாஜியின் பெயரைச் சொல்லி ஓட்டு வாங்கிப் பிழைக்கும் கூட்டம் இது. மஹாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் எங்கே வோட்டுக்களின் திசை    மாறி விடுமோ என்ற அச்சமின்றி வேறு காரணம் கிடையாது.

 அம்புட்டுதான்…

No comments:

Post a Comment