இலங்கையின் அரசியலில் ஒரு மிகப் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார். ஜே.வி.பி மற்றும் 27 இடதுசாரிக் கட்சிகள், ஜனநாயக அமைப்புக்கள், NPP என்ற பெயரில் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி கண்டன. அனுராகுமார் திஸநாயகா புதிய ஜனாதிபதியாகி உள்ளார். கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவும் தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கேயும் தோற்றுப் போயுள்ளனர். ராஜபக்சே குடும்ப வாரிசு எங்கோ ஒரு மூலையில் . . .
ஜே.வி.பி யின் கடந்த காலம் களங்கமானது. இடதுசாரிக் கட்சியாக துவங்கி அதே தடத்தில் கால் பதித்து பின் தடம் மாறி இனவெறி அமைப்பாக தமிழர்களை வேட்டையாடிய ரத்த வரலாறு அவர்களுடையது. ஆனால் ஆயுதங்களை கைவிட்டு ஜுஅனநாயகப் பாதைக்கு திரும்பினார்கள். ராஜபக்சே குடும்பத்திற்கு எதிரான கோபத்தை மக்களின் போராட்டமாக ஒருங்கிணைத்ததுதான் இன்று அனுரா குமார் திஸநாயகாவை ஜனாதிபதி ஆக்கியுள்ளது.
ஆனாலும் தமிழர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை என்பதால்தான் அப்பகுதிகளில் அனுராவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரிடத்திலும் ஒற்றுமையை உருவாக்குவதும் அனைருக்குமான வளமான எதிர்காலத்தை கட்டமைப்பதே புதிய அரசின் இலக்கு என்று சொல்லியுள்ளார்.
மிகவும் சிறந்த சொல் செயல் என்பார்கள். எனவே சொல் செயல் வடிவம் காணட்டும்.
புதிய ஜனாதிபதிக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட வேண்டும். சர்வதேச நிதி அமைப்பின் விதிகளுக்கு முந்தைய அரசுகள் செய்த சரணாகதிகள் இன்னும் ஒரு மிகப் பெரிய சவால். ஊழல் மலிந்து போன நாட்டில் அதனை கட்டுப்படுத்துவது ஆகப் பெரிய சவால். இந்த முடிவை விரும்பாத இந்தியா கொடுக்கப் போகும் சிக்கல்கள் எத்தனையோ?
இந்த சவால்களை சந்திக்கும் திறனை மக்களின் ஆதரவு என்ற ஆயுதம் கொடுக்கும்.
இந்த ஆட்சி சோஷலிச ஆட்சியாக மலரும் என்ற அதீத எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு கிடையாது. ஒரு மக்கள் நல ஆட்சியாக இருந்தாலே போதும்.
அந்த இலக்கை நோக்கி ஆட்சி முன்னேறட்டும். இலங்கையின் இடதுசாரி துருப்பம் இனிதாக அமையட்டும்.
No comments:
Post a Comment