Thursday, September 12, 2024

அவர் துணிச்சல் யாருக்கு வரும்!!!

 அவசர நிலைக் காலம் முடிந்து தேர்தலில் இந்திரா அம்மையார் தோற்றுப் போகிறார்.

பிரதமர் பதவியை இழந்தாலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வேந்தர் பதவியை துறக்க அவருக்கு மனம் வரவில்லை.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் தன் உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு இந்திரா அம்மையாரின் வீட்டிற்கு செல்கிறார்.

மாணவர்கள்தானே, இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவர்களை பார்க்க இந்திரா வெளியில் வருகிறார்.

மாணவர் சங்கத் தலைவர், இந்திரா அம்மையார் பதவி விலக வேண்டும் என்று எழுதி எடுத்து வந்திருந்த கடிதத்தையும் அதில் சொல்லப்பட்ட காரணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அனைவர் முன்னிலையிலும் படிக்கிறார்.

கடிதத்தின் வெப்பம் தாங்க இயலாத இந்திரா அம்மையார் வீட்டிற்குள் சென்று விட்டார்.

அன்று மாலையே வேந்தர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை அனுப்பி விட்டார்.

சக்தி மிக்க முன்னாள் பிரதமர் என்றெல்லாம் பார்க்காமல் அவரது குறைகளை முகத்துக்கு நேராக உரக்கக் கூறிய அந்த மாணவர் தலைவர் . . .

தோழர் சீத்தாராம் யெச்சூரி.



No comments:

Post a Comment