Saturday, August 31, 2019

புத்திசாலி புலனாய்வுப் புலிகள் ????

மனித உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் முக நூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.




படத்தில் இருப்பது டாக்டர் பத்மஸ்ரீ உபேந்திர கவுல். காஷ்மீரில் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். எல்லா காஷ்மீரிகளையும் போல காஷ்மீரின் சிறப்புநிலை ரத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். 


ஹுரியத் தலைவர்களில் ஒருவரும், ஒரு காலத்திய தீவிரவாதியும், இந்தியா / பாக் இரண்டின் பிடிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுதந்திர காஷ்மீர் எனும் கோரிக்கையை வைப்பவருமான யாசின் மாலிக்கின் இதய நோய்க்கு நீண்ட காலமாக வைத்தியம் செய்து வருபவர். அவர் யாசினுkகு ஒரு மெசேஜ் அனுப்புகிறார், அதில் “INR 2.78” என்றொரு குறிப்பு இருப்பதை கண்டு பிடித்துவிடுகிறது இந்தியாவின் ஆக அதிகாரம் பெற்ற சூப்பர் புலனாய்வு நிறுவனமான NIA. என்னது... INR ஆ? Indian National Rupee ?!

ஆஹாங்... இது ஏதோ பயங்கரவாத நடவடிக்கை தொடர்பான ஹவாலா பணப் பரிவர்த்தனை தொடர்பான இரகசியத் தகவல் பரிமாற்றம் என்பதைக் கண்டுபிடித்து (!!!!!!!) அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இது எப்டி இருக்கு.. INR (International Normalized Ratio) என்பது இதயச் செயல்பாடு தொடர்பான ஒரு அளவீடு. தனது நோயாளிக்கு சிகிச்sai அளிக்கும் மருத்துவர் அனுப்பிய செய்தி இவ்வாறு ஹவாலா பணப் பரிமாற்றமாக நமது புலனாய்வாளர்களால் வாசிக்கப்பட்டுள்ளது.

ஏதோ புகழ்பெற்ற மருத்துவர், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் இத்தோடு தப்பித்து விட்டார். வேறு யாராகவும் இருந்தால். இது இப்படி ஒரு நகைச்சுவைக் கதையாக முடிந்திருக்காது. ஒரு சோகக் கதையாக அவர்கள் தலையில் விடிந்திருக்கும்.
(படமும் செய்தியும் : Indian Express, Aug 31)

1 comment:

  1. காசுமீர் பற்றித் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதயத்தைப் பிழிகின்றன. நீங்கள் துவிட்டரில் இருக்கிறீர்களா தோழரே? இருந்தால் @maharaja_2020 அவர்களைப் பின்தொடருங்கள்! ஊடகங்கள் மறைக்கும் உண்மையை வெளிக் கொண்டு வருவோம்!

    ReplyDelete