அத்திவரதர் வைபவத்திற்காக யாரெல்லாம் கடுமையாக உழைத்தார்கள் என்பதை மேலே உள்ள தமிழ் இந்து செய்தி சொல்கிறது.
இதற்காக எல்லாம் அவர்களுக்காக ஏதாவது சிறப்பு ஊதியம் ஏதாவது கொடுத்திருப்பார்களா?
நீங்கள் வேறு, இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு உணவு கூட ஒழுங்காக கிடைத்திருக்காது. அத்திவரதர் என்று இல்லை, அரசு ஊழியர்கள் இதே இன்னல்களைத்தான் எந்த ஒரு பெரிய நிகழ்விலும் சந்திப்பார்கள். சொல்லப் போனால் இவர்களின் கைக்காசுதான் செலவழிந்திருக்கும்.
இப்போது ஒரு கணக்கு உலாவுகிறது.
அரசு நாற்பது கோடி ரூபாய் செலவழித்தது. ஆனால் வரவு வெறும் ஏழு கோடி ரூபாய் மட்டுமே.
அப்படியென்றால் ஒரு கோடி பேர் அத்திவரதரைத் தரிசித்ததாக சொல்லப்படுவதில் ஒருவர் சராசரியாக ஏழு ரூபாய் மட்டும்தான் உண்டியலில் போட்டார்களா?
சாதாரண பாஸ், வி.ஐ.பி பாஸ், வி.வி.ஐ.பி பாஸ் என்றெல்லாம் வினியோகம் செய்து வந்த பணம் எவ்வளவு?
ஐம்பதாயிரம் ரூபாய் வரை அதை பிளாக்கில் விற்று வந்த பணம் யாருக்கு போனது?
அர்ச்சகர் தட்டில் விழுந்த நோட்டுக்கட்டுக்கள் யாருடைய பைக்கு சென்றது?
ஆயிரம் கோடி ரூபாய் வரை வந்ததாக சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தலாக இருக்கலாம். ஆனால் ஏழு கோடி ரூபாய் என்பது நிச்சயமாக மிகப் பெரிய பொய்க்கணக்கு.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களிடம் இருந்ததை இழந்து பணியாற்ற, மாவட்ட ஆட்சியர், பட்டுப்புடவைக் கடை வியாபாரிகள், உயர் காவல் அதிகாரிகள், அறநிலையத்துறை உயர் அதிகாரிகள். அர்ச்சகர்கள் ஆகியோர் இந்த நாற்பத்தி எட்டு நாட்களில் நன்றாக கல்லா கட்டியுள்ளார்கள்.
"கோயில் கோயிலாக இருக்க வேண்டும், கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது"
என்பது வேண்டுமானால் கலைஞரின் வசனமாக இருக்கலாம். அதை நடைமுறைப்படுத்துவதற்காக போராடியதற்காக சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்ட அதே இடத்தில்தான் இத்தனை நாள் அத்திவரதர் அருள்பாலித்துள்ளார்.
அந்த இடத்தில் ஒரு மெகா ஊழல் நடப்பதில் என்ன வியப்பு உள்ளது?
கடவுள் நம்பிக்கைக்கு மீண்டும் மரணஅடி
ReplyDeleteவிஜயேந்திரன் எட்டிப்பார்க்கலையாமே
ReplyDeleteவந்தாராம். சரியான மரியாதை கொடுக்கலை என்று பேச்சு அடிபடுகிறது
Delete