"பட்டு வேட்டி கனவிலிருந்தவனின்
இடுப்பில் கட்டியிருந்த
கோமணமும் பறி போனது"
என்ற வரிகள் இந்தியாவிற்கே பொருந்துமென்றாலும் இப்போது அது காஷ்மீருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
காஷ்மீர் மக்கள் ஏற்கனவே இந்தியா மீது வெறுப்பில்தான் உள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி தொடங்கி வைத்த துரோக வரலாற்றால் மனம் நொந்து போயிருந்தவர்கள் நெஞ்சில் குத்தீட்டியைப் பாய்ச்சி அவர்களை வீழ்த்தியுள்ளது பாஜக.
இந்தியாவுடன் இணையும் போது அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போயிருந்ததால் அம்மாநில மக்கள் ஏற்கனவே நம்பிக்கை இழந்திருந்தார்கள்.
இப்போது பாஜக அதனை முற்றிலுமாக பறித்து விட்டது. அதை விட மிகப் பெரிய துரோகம் அம்மாநிலத்திற்கான மாநில அந்தஸ்தைப் பறித்து அதனை ஒரு யூனியன் பிரதேசம் என்று மாற்றியுள்ளது.
ராணுவத்தை வைத்து மக்களை ஒடுக்கி விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறது மோடி அரசு.
இது ஒரு முட்டாள்தனமான முடிவும் கூட.
ஏற்கனவே அன்னியப்பட்டுப் போயிருக்கிற காஷ்மீர் மக்களை "தனி நாடு" என்ற கோரிக்கையை நோக்கியோ அல்லது "பாகிஸ்தானே மேல்" என்றோ சிந்திக்க வைக்கிற முடிவு.
வளர்ச்சியின் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்குப் பதிலாக அடக்குமுறை மூலம் தீவிரவாதத்திற்கு தீனி போட்டுள்ளது மோடி அரசு.
ஒரு நாட்டின் ஆட்சியாளர் முரடனாகவும் மூடனாகவும் இருந்தால் அந்த நாடு நாசமாகப் போகும் என்பதற்கு வரலாற்றில் ஏற்கனவே பல உதாரணங்கள் உள்ளது.
புதிய உதாரணத்தை மோடி படைத்துக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment