Tuesday, August 13, 2019

நேருவால் இயலும். மோடியால்?????



கவிஞர் ஃபிரக் கோராக்பூரி வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து எங்கள் தலைவர் தோழர் அமானுல்லாகான் பகிர்ந்து கொண்டதை கீழே பதிவிடுகிறேன்.

புதுடெல்லியில் ஒரு கவிஞர்கள் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோரக்புரி அவர்கள் அங்கே  கவிதைகள் வாசிக்க இருந்தார்.

நிகழ்ச்சி பற்றி அறிந்த நேரு தானும் கலந்து கொள்வதாக கூறுகிறார். நேருவின் பங்கேற்பு பற்றி தெரிந்ததும் ஒரு அரசுத் துறை, நிகழ்ச்சியின் செலவுகள் அனைத்தையும் ஏற்கிறது.

அரசுத்துறை செலவினங்களை ஏற்கிறது என்பதை அறிகிற கோரக்புரி கடுப்பாகிறார். இது ஒன்றும் அரசவை கிடையாது.  ஆட்சியாளர்கள் தரும் பணத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அவர்கள் செயல்பாடுகளை எப்படி விமர்சிக்க முடியும்? எனவே இதில் நான் பங்கேற்க மாட்டேன் என்று அறிவிக்கிறார்.

கோரக்புரியின் முடிவு பற்றி கேள்விப்பட்ட நேரு என்ன செய்தார் தெரியுமா?

உடனடியாக கவிஞரின் வீட்டுக்கே சென்று அவர் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். (சுதந்திரப் போராட்ட காலத்தில் நேரு காங்கிரஸ் தலைவராக இருந்த போது காங்கிரஸ் கட்சி அலுவலக துணைச் செயலாளராக நேருவால் பணியமர்த்தப்பட்டவர் கோரக்புரி என்பது இங்கே ஒரு தகவல்.) நாங்கள் நடத்த  திட்டமிட்டது கவிஞர்கள் சங்கமம். எப்போது அரசு அதற்கு பணம் தருகிறதோ, அப்போது அதன் தன்மை மாறி விடும். எனவே என்னால் கலந்து கொள்ள முடியாது என்று அவர் நேருவிடமும் மறுத்து விடுகிறார்.

பிறகு நேரு பணம் கொடுப்பதாகச் சொன்ன அரசுத்துறையின் அதிகாரிகளை அழைத்து கொடுத்த பணத்தை திரும்பப் பெறச் சொல்கிறார். அதன் படியே அவர்களும் செய்ய, கவிஞர்களின் பணத்தைக் கொண்டே அந்த நிகழ்ச்சி நடக்கிறது.

நேருவும் கலந்து கொள்கிறார். அவரை வைத்துக் கொண்டே அவரது ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கவிதைகளை படிக்கிறார் கோரக்புரி.

இப்போது அது போல எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? 

நேருவால் செய்ய முடிந்ததை கண்டிப்பாக மோடியால் செய்ய முடியாது.

நேருவால் செய்ய இயலாத ஒன்றை மோடி செய்திருப்பார். கோரக்புரியை "ஆண்டி இந்தியன்" என்று சொல்லி சிறையில் அடைத்திருப்பார். 


8 comments:

  1. நேரு தலைவர்,
    மோடி தறுதலை

    ReplyDelete
    Replies
    1. தலை வேறு ஒருவரின் சிகரெட்டை பற்ற வைக்கும். தருதலை தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கும்.

      Delete
    2. தோழர், நேரு வெளிப்படையாக இருந்தார். மோடியைப் போல எந்த இளம்பெண்ணையும் உளவுத்துறையை வைத்து உளவு பார்க்கவில்லை. தறுதலை இந்தியாவின் தலையெழுத்தை கேவலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது

      Delete
  2. தன்னை ஜனநாயக வாதியாக தன்னை காட்டிக்கொண்ட நேரு காஷ்மீர் விடயத்தில் நடந்து கொண்டது தவறுதானே
    அது மட்டுமா கேரளா நம்பூதிரி பாட் அரசை கலைத்து அராஜகம் பண்ணியதும் நேரு தானே
    .
    இந்த பதிவுக்கு தொடர்பு இல்லாததாக இருந்தாலும் தறுதலை மோடியை விமர்சிக்க நேருவை புனிதராக்குவதை எண்னை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
    .
    மோடியை எதிர்க்கும் காரணத்துக்காக மம்தாவை புனிதராக்க முடியுமா ?

    இன்றைய காஷ்மீர் கொடூரத்துக்கு அத்திவாரம் நேருதான்

    நான் பிறப்பால் மலையாளி

    ReplyDelete
  3. நேருவிடம் ஏராளமான விமர்சனங்கள் உண்டு.
    அதே போல பாராட்ட வேண்டிய அம்சங்களும் உண்டு.
    காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதற்கு காரணமும் நேரு. பிறகு அப்பிரச்சினையை சொதப்பியதும் அவர்தான்.

    ஆனால் மோடியோடு ஒப்பிடுகையில் பல மடங்கு உயர்ந்தவர் என்பதைத்தான் இப்பதிவு சொல்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஏன் ஒப்பிடவேண்டும்? திமுக ஸ்டாலின் சோவியத் ஸ்டாலின் ஒப்பிடுக

      Delete
    2. பாவம். மோடியை ஆதரிப்பதால் ரொம்பவே கன்ப்யூஸ் அகிட்டீங்க போல இருக்கே தோழர்!

      Delete