Monday, August 12, 2019

நாம் இணைத்தோம். அவர்கள் ??????


நாங்கள் எப்போது முழக்கமிட்டாலும் 

ஏ.ஐ.ஐ.இ.ஏ வாழ்க (A.I.I.E.A ZINDABD) என்று முழக்கமிட  மாட்டோம். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வாழ்க ( ALL INDIA INSURANCE EMPLOYEES' ASSOCIATION ZINDABAD") என்றுதான் முழக்கமிடுவோம்.

சங்கம் வாழ்க என்று மட்டும் சொல்லவில்லை,
இந்தியா வாழ்க என்றும் முழக்கமிடுகிறோம்.

என்று ஸ்ரீநகர் கோட்டத்தின் தலைவர் தோழர் ஏ.எம்.தாந்திரி எப்போதும் கூறுவார்.

காஷ்மீர் மக்களை இந்தியாவோடு உணர்வுபூர்வமாக இணைக்கிற வேலையைத்தான் நம் சங்கம் எப்போதும் செய்து வருகிறது.

பிரிக்கிற வேலையைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.

"இந்தியா வாழ்க" என்று முழக்கமிடுகிற தோழர் தாந்திரி போன்றவர்கள் முதுகில் குத்தியுள்ளது இந்திய அரசு.

அரசு அறிவிப்பு வந்தது முதல் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். இது வரை இயலவில்லை.

ஸ்ரீநகர் கோட்டத்தின் பொதுச்செயலாளர் தோழர் பவன் குமார் குப்தா ஜம்முவில் இருக்கிறார். அவரையும் இது வரை எங்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இதுதான் ஜம்மு காஷ்மீரின் இன்றைய இருண்ட நிலை.

எட்டு மாதங்களுக்கு முன்பாக நான் ஸ்ரீநகர் சென்ற போது ஒரு மூத்த் தோழர், சி.ஐ.டி.யு அமைப்பைச் சேர்ந்தவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறினார்.

"காஷ்மீர் மக்களாகிய நாங்கள் இந்தியாவுடன் இணைந்த போது இருந்த இந்தியா அல்ல இப்போதுள்ள இந்தியா. அப்போது இருந்தது மதச்சார்பற்ற இந்தியா. ஆனால் இப்போதுள்ள ஆட்சியாளர்களோ, மத அடிப்படைவாதிகள். காஷ்மீருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் உள்ளது."

அவரது அச்சம் இப்போது நிஜமாகியுள்ளது.


- நேற்று பெங்களூரில் நடைபெற்ற 
நான்காவது அகில இந்திய மகளிர் மாநாட்டில்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர்
தோழர் அமானுல்லாகான் உரையிலிருந்து . . .

2 comments:

  1. உங்கள் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete