ப.சிதம்பரத்தை எப்போதுமே எனக்கு பிடிக்காது
ஏனென்றால்
அவர் தொழிலாளர்களுக்கு எதிரானவர்,
சாதாரண மக்களுக்கு எதிரானவர்.
உள்நாட்டு, வெளி நாட்டு பெரு முதலாளிகளின் சேவகர்,
எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாரிடம் தாரை வார்க்க துடித்தவர்,
தனியார் மயத்தை ஒப்புக்கொண்டால் கேட்கும் ஊதிய உயர்வை வழங்குவேன் என்று ஆசை காட்டியவர்,
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கும் வேளையில் "அந்த குரங்குகளுக்கு கொஞ்சம் பட்டாணியை வீசுங்கள்" என்று ஆணவமாக பேசியவர்.
அப்படிப்பட்டவர் கைது ஆவதும் சிறைக்குச் செல்வதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்திகள்.
ஊழலே செய்திருக்க வாய்ப்பில்லாத உத்தமர் அல்ல அவர்.
ஆனால் வழக்கம் போல மோடி அரசு தன்னுடைய அராஜகப் போக்கில் செய்த ஒரு வேலையைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முன் ஜாமீன் கிடைக்கவில்லை.
போ, கைது செய்.
அதை விட்டு "பெருமாள் பிச்சை தலைமறைவு" என்று "போலீஸ், இல்லை பொறுக்கி" புகழ் சாமி செய்தது போல
தலைமறைவு, தப்பி ஓட்டம் என்று செய்தி பரவ விட்டது எல்லாம் அரசியல் அல்பத்தனம்.
அந்த செய்தியை வைத்து ஊடகங்கள் ஒரு நாள் முழுதும் குப்பை கொட்டியது அயோக்கியத்தனம்.
அல்பர்களுக்கு அதிகாரம் வந்தால் வேறென்ன நடக்கும்!
வீட்டில் அவர் இல்லை. எங்கு இருக்கிறார் என யாரும் கூறவில்லை. செல்போன் கூட ஸ்ட்ச் ஆப். சிபிஐ வீட்டிற்குள் அனுமதி இல்லை. சுவர் ஏறி குதித்து உள்ளே செல்ல வேண்டிய அவல நிலை. இந்த விவகாரத்தில் முழு தவறும் அதி மேதாவி உடையதுதான்
ReplyDeleteஇதெல்லாம் சி.பி.ஐ கொடுத்த பில்ட் அப் தானே
Deleteப.சிதம்பரத்தை எப்போதுமே எனக்கு பிடிக்காது ஏனென்றால்
ReplyDeleteஅவர் தொழிலாளர்களுக்கு எதிரானவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள் .
ஒரு காலத்தில் ப சி தோழர்களுக்கு ஆதரவாக இருந்தார் .
MRF யூனியன் வழக்கறிஞராக இருந்தார் . அது ஒரு காலம் .
நம்பவில்லை என்றால் தோழர்களை கேட்டுப் பாருங்கள் !
ஆம். ஒரு காலத்தில் அவர் ஐ.என்.டி.யு.சி சங்கத்தின் நிவாகியாக சிம்சன் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேச வந்துள்ளார் என்று மறைந்த எங்கள் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் கூறியுள்ளார். அப்போதே அவரிடம் முதலாளித்துவ சிந்தனைகள் இருந்தது என்றும் கூறியுள்ளார்
Delete