வேலூர்
மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. நல்ல வேளையாக குறைவான வாக்கு
வித்தியாசத்திலாவது திமுக வென்று விட்டது.
இல்லையென்றால்
ஏ.சி.சண்முகத்திடம்
பணம் வாங்கிக் கொண்டு அவரை ஜெயிக்க வைத்து விட்டீர்கள் என்ற கெட்ட பெயர், பணம் வாங்காத,
அவருக்கு வாக்களிக்காத என்னைப் போன்றவர்களுக்கும் சேர்த்தே வந்திருக்கும். வேலூர் மானம்
பிழைத்தது.
காலையில்
இருந்த நிலைமை கவலைக்குரியதாகவே இருந்தது. கிட்டத்தட்ட 15,000 வாக்குகள் வரை முன்னிலையில்
இருந்த ஏ.சி.சண்முகம் கடைசியில் மெல்ல, மெல்ல பின்னே போய் தோற்று விட்டார்.
ஆனாலும்
அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை சாதாரணமானது அல்ல.
அவர்
பெற்ற வாக்குகளின் பின்னே இருக்கிற சில அம்சங்கள்.
முன்பு
தேர்தல் ஒத்தி வைக்கப்படும் முன்பே அவர் நூறு கோடி ரூபாய் செலவு செய்தார் என்று ஒரு
தகவல். இல்லையில்லை 115 கோடி என்று கண் சிமிட்டுகிறது இன்னொரு தகவல். அதனால்தான் அவர்
தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட போது கண்களில் நீர் பொங்க கதறி அழுதார்..
ஏற்கனவே
ஒரு முறை பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இரண்டு
முறை தோற்றுப் போனதால் உருவான அனுதாபம், இரண்டு முறை பணப்பட்டுவாடா செய்தது ஆகியவையே அவருக்கு இவ்வளவு வோட்டுக்கள்
கிடைக்க காரணம்..
முதல்
சுற்றுக்களில் முன்னிலையில் இருந்து மகிழ்ச்சியை அனுபவித்த மனிதர் தோற்றுப் போன போது
என்ன மன நிலையில் இருந்த்திப்பார்?
ஆனால்
பாவம் அவரது கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் நிலைமயை நினைத்தால்தான் கவலையாக
இருக்கிறது. இனி அங்கே கட்டணங்கள் பல மடங்கு உயரப் போகிறது.
Really very True Sir!
ReplyDeleteஆபத்தான தேர்தல் முடிவாக நான் பார்க்கின்றேன் தோழர்
ReplyDeleteமுஸ்லீம் , கிறிஸ்தவர்கள் மிக அதிகமாக இருக்கும் பகுதியில் இப்படி குறைந்த வித்தியாசம் அதிர்ச்சியாக இருக்கின்றது
அதுவும் அதிமுக எதிர்ப்பு வாக்கான 27000 நா த க வாக்கையும் கருத்தில் எடுக்க வேண்டும்
திமுக எதுவும் பணம் கொடுக்கவில்லையா?
ReplyDelete